Pallu Padama Paathuko Review: பிரைவேட் ஷோ.. தியேட்டர்ல வெறும் ரெண்டு பேரு தான்.. ரொம்ப மோசம்!

சென்னை: டெம்பிள் மங்கீஸ் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஜய் வரதராஜா இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பல்லு படாம பாத்துக்கோ படம் பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது.

படத்தின் டைட்டிலே படு ஆபாசமாக இருந்த நிலையில், படம் பல சிக்கல்களை சந்தித்தன. வழக்குகள் போடப்பட்ட நிலையில், கடைசியாக படம் வெளியாக அனுமதி கிடைத்த நிலையில், ஏ சான்றிதழ் உடன் வெளியாகி உள்ள இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சுத்தமாக வரவேற்பே இல்லை என்றே தெரிகிறது.

படத்தை பார்த்த ஒரு சிலர் சமூக வலைதளத்தில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

பல்லு படாம பாத்துக்க வெளியானது

பல்லு படாம பாத்துக்க வெளியானது

லவ் டுடே படத்தில் காக்கா விழுந்த பிரியாணியை பார்சல் செய்து பிச்சைக்காரருக்கு கொடுப்பதை வீடியோவாக எடுத்து வெளியிடும் ரோலில் நடித்து இருப்பார் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவான பல்லு படாம பாத்துக்க திரைப்படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு இன்று தியேட்டரில் வெளியானது. அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி இந்த படத்தில் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமாக உருவாகி உள்ள இந்த படம் ஜாம்பி கதையாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரைவேட் ஷோ

பிரைவேட் ஷோ

டைட்டிலை பார்த்து தியேட்டருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வருவாங்கன்னு நம்பி போன இருவர் படத்தில் அவங்க ரெண்டு பேருக்கும் மட்டுமே பிரைவேட் ஷோ ஓடுவதை புரிந்து கொண்டு தூங்கி வழியும் வீடியோவை வெளியிட்டு படத்தை பங்கமாக ட்ரோல் செய்துள்ளனர். இதற்கு மேல் இந்த படத்திற்கு விமர்சனம் தேவையில்லை என கலாய்த்துள்ளனர்.

18 பிளஸ்

18 பிளஸ்

இந்த வாரம் பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி உள்ளன. சசிகுமாரின் அயோத்தி, மித்ரன் ஜவஹரின் அரியவன், பிரபுதேவாவின் பஹீரா மற்றும் பல்லு படாம பாத்துக்கோ படங்கள் வெளியாகி உள்ளன. இதில், பல்லு படாம பாத்துக்கோ திரைப்படம் 18 பிளஸ் படமாகவெளியாகி உள்ளதாக இந்த நெட்டிசன் கமெண்ட் போட்டுள்ளார்.

100 ரூபாய் 80 ரூபாய்

100 ரூபாய் 80 ரூபாய்

எங்க மாமா ஒருத்தர் இருக்காரு அவரு 80 ரூபாய்க்கு வேலை செய்வாரு என்கிற பரிதாபங்கள் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ வள்ளி தியேட்டரில் வெறும் 100 ரூபாய்க்கும் 80 ரூபாய்க்கும் படத்தின் டிக்கெட் கொடுக்கிறோம், வந்து பாருங்க என கூவி கூவிக் கொடுத்தும் தியேட்டர் பக்கம் போயிடாம பாத்துக்கோ என ரசிகர்கள் உஷாராகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X