விஜய் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் தமன்… Pan Ganna Announcement ட்வீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்நிலையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தமன் டிவீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

தளபதியின் வாரிசு
வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கத்து. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆல்தோட்ட பூபதி ரீமிக்ஸ்
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் தமன் கூட்டணி வைத்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யும் சிம்ரனும் அல்டிமேட்டாக ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸை கேக்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இன்று அப்டேட்?
வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இன்னும் அஃபிஷியல் அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில், இசையமைப்பாளர் தமனின் டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அதில் பான் கானா அறிவிப்பு இன்று என பதிவிட்டுள்ளார். அதாவது தரமான குத்து பாடலின் ரிலீஸ் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என சுருக்கமாக கூறியுள்ளார். இந்தப் பாடல் விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். திடீரென தமன் ட்வீட் செய்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு காணப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜியுடன்
வாரிசு படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'தளபதி 67' படத்திற்கு பிறகு, ஆர்ஜே பாலாஜி இயக்கும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்க்காக தன்னிடம் ஒரு கதை இருப்பதாக ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











