வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய விவகாரம்: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்.. பரபரப்பு!
டெல்லி: சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக கடந்த 2016- ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
சட்டத்திற்கு புறம்பாக பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த பனாமா பத்திரிகை வெளியிட்டது. அதில் நடிகை ஜஸ்வர்யா ராயின் பெயர் இடம் பெற்றிருந்தது.

பல பிரபலங்களின் பெயர்கள்
இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி 700க்கும் மேற்பட்ட அரசியவாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பனாமா ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சம்மன் அனுப்ப முடிவு
இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோருக்கும் இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்து. அப்போது தனக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

குடும்பத்தினர் பெயர்
இன்றைக்கு அவர் விசாரணைக்கு ஆஜராகுவார் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராயின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











