சாகசம் நிறைந்த திரில்லர் படம் "பஞ்சராக்ஷ்ரம்"... டிசம்பரில் வருது

சென்னை: இயற்கைக்கு அப்பாற்பட்டு சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது 'பஞ்சராக்ஷ்ரம்' இப்படம் டிசம்பர் 27ந் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் அவ்வப்பொழுது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை வேறுப்பட்ட கதைக்கருவாக இலலாமல் ஒரே மாதிரியான திகில் படங்களாக மட்டுமே உள்ளன. 'சூப்பர்நேச்சுரல் ' படத்திற்கும் 'ஹாரர்'படத்திற்கும் நிறையே வித்தியாசங்கள் உள்ளன. அதை நிரூபிக்கும் வகையில் எடுத்துக்கப்பட்ட படம் தான் 'பஞ்சராக்ஷ்ரம்'. சூப்பர்நேச்சுரல் - சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லிங் படம்.

 panchatcharam adventure thriller movie release on december 27

'பஞ்சராக்ஷரம்' தலைப்பில் குறிப்பிடுவது போல, தீ, காற்று, நீர், பூமி, வானம் என இயற்கையை அடிப்படையாக கொண்டு கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானதும் அவர்களுக்குள் நல்ல பிணைப்பு ஏற்படுகிறது. அவர்கள் ஒன்றாக ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது நடைமுறைக்கு மாறாக நம்ப முடியாத தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு பயங்கரமான கொந்தளிப்பாக மாறுகிறது.

 panchatcharam adventure thriller movie release on december 27

படத்தின் கதைக்களம் வித்தியாசமானதாகவும், தனித்துவமாகவும் காணப்பட்டாலும், இது இந்திய திரைப்படத் துறையில் முதல் முறையாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட பல வகைகளின் தொகுப்பாகும். இது ஒரு உளவியல் சூப்பர்நேச்சுரல் சாகச த்ரில்லர் திரைப்படமாக இது இருக்கும்.

கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 2 ரெட் டிராகன்கள், 2 ஏ.ஆர்.ஆர்.ஐ அலெக்சாஸ், 7 கோ ப்ரோஸ் மற்றும் 2 டி.ஜே.ஐ ட்ரோன்கள் போன்ற பல சிறப்பம்சங்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் நேரடியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். ஒரு பைக் மற்றும் பல கார்களின் துரத்தல்கள் காட்சிகள் மூச்சடைக்கக்கூடியதாக உள்ளது. இப்படத்தின் இசை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 27ந் தேதி இப்படம் திரைக்கு வரஉள்ளது.

 panchatcharam adventure thriller movie release on december 27

பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் 'சந்திரமௌலி'. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இவர் 'பொது நலம் கருதி' படத்தில் நடித்த நடிகர் ஆவார்.

More from Filmibeat

Read more about: movie படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X