அப்பாடா... முடிந்தது பஞ்சதந்திர டாஸ்க்… பெருமூச்சு விட்ட ஹவுஸ்மெட்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5ன் பஞ்தந்திர டாஸ்கில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு வீடே ஒரே களேபரம் ஆனது.
பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் தான் குரூப்னு நினைச்சிக்கிட்டு இருந்தா இந்த பஞ்சதந்திர டாக்குலத்தான் யார் யார்... யார் கிட்ட இணக்கமா இருக்கங்கனு தெரிஞ்சது.
மூனு நாளா ரசிகர்களை போட்டு பாடாய்படுத்திய இந்த டாஸ்க் ஒரு வழியாக முடிந்து விட்டது.

5 நாணயங்கள்
பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. மதிப்பு மிக்க 5 நாணயங்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தன. அதை திருடி எடுத்து பாதுகாத்துவைக்க வேண்டும், மேலும் ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்படுகிறது.

என்னடா இது
இதையடுத்து பிக் பாஸ் வீடே பைத்தியக்கார ஹாஸ்பிட்டலாக மாறிபோச்சுனுத்தான் சொல்லவேண்டும். எங்க பார்த்தாலும் திருடுவது, மறைப்பது, போட்டுக் கொடுப்பது என ச்சீ...என்னடானு இப்படி ஆகிபோச்சினு சொல்லவைத்தது.

5 பேருக்கு காயின்
ஒருவழியாக இந்த பஞ்சதந்திர டாஸ்க் இன்று முடிந்து விட்டதாக அறிவித்த பிக் பாஸ் யார் யார் கிட்ட நாணயம் இருக்குனு ஹவுஸ்மெட்களிடம் காட்ட சொன்னார். இதையடுத்து தாமரை தன்னிடம் காற்று நாணயம் இருப்பதாக கூறினார். வருண் நீர் நாணயத்தையும், நிரூப் நிலம் நாணயத்தையும், இசைவாணி நெருப்பு நாணயத்தையும், பவானி ஆகாயத்தையும் கேமரா முன் காட்டினார்கள்.

அடுத்த புயல்
இதையடுத்து... போட்டியாளர்கள் அப்பாடானு மூச்சு விடுவதற்குள்.... பிக் பாஸ் அடுத்த குண்டை போட்டார்... ல்க்ஜரி பட்ஜெட்டின் இரண்டாம் டாக்ஸ் என்று கூறி இந்த நாணத்தை வைத்திருப்பவர்கள் அந்தந்த இடத்தில் ஆளுமை சக்தியை சரியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், பெட்டியில் வைக்கப்படும் நாணத்தை மீண்டும் யாராவது எடுத்து கேமராவில் காண்பித்தால் அது அவர்களுக்கு சொந்தம் என்று கூறி மீண்டும் ஒரு புயலைக்கிளப்பினார்.

பஞ்சதந்திர முடிந்தது
இதையடுத்து, பஞ்சதந்திர 2வது டாஸ்க் முடிந்துவிட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். இனி இந்த நாணயங்கள் யார் யார் கிட்ட இருக்கோ அவங்களுக்கே சொந்தம் என்று கூறிவிட்டு... பஞ்சதந்திர 3வது டாஸ்க் விரைவில் ஆரம்பம் என்று கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











