ஜியாகான் தாயார் மீது அவதூறு வழக்கு: ரூ. 100 கோடி கேட்கும் ஆதித்யா பாஞ்சோலி

By Mayura Akilan

மும்பை: தங்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியதற்காக ஜியாகானின் தாயார், 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பாஞ்சோலி - ஜரினா வகாப் மும்பை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையான ஜியாகான் (25) கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார்.

Pancholis file Rs 100-cr defamation suit against Jiah’s mother

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபல திரை நட்சத்திர ஜோடிகளான ஆதித்யா பஞ்சோலி, சாரினா வஹாப் ஆகியோரின் மகனான நடிகர் சூரஜ் பஞ்சோலி (22), ஜியாகானுடன் நெருக்கமாக பழகிவந்ததும், இந்த பழக்கம் காதலாக மாறியதும், கருத்து வேறுப்பாடு காரணமாக காதலை முறித்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் சூரஜ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜியாகான் தூக்கில் தொங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள், சூரஜ் உடன் தான் பேசியுள்ளார். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக, ஜியாகானின் அம்மா ரபியாகான் போலீசில் தெரிவித்தார்.

இதுவரை இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாடிய ரபியாகான் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜியாகானின் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

இதனிடையே தங்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக ரபியாகான் மீது மும்பை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆதித்யா பாஞ்சோலி, அவரது மனைவி ஜரினா வகாப், மகள் சனா ஆகியோரைப் பற்றி அவதூறு கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்தாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் களங்கம்

டுவிட்டரில் களங்கம்

தங்களின் மனதை புண்படுத்தும் வகையில் டுவிட்டரில் ரபியா கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மே 1ம் தேதிவரை 18 செய்திகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் ரபியா. இது தங்களையும், தங்களின் ரசிகர்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே ரூ.50 கோடி ருபாய் நற்பெயரை களங்கப்படுத்தியதற்காகவும், தொழிலில் இழப்பீடு ஏற்படுத்தியதற்கான ரு.25 கோடியும், தவறான கருத்துக்களை வெளியிட்டு மனதை புண்படுத்தியதற்காக ரூ.25 கோடி என மொத்தம் ரூ.100 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 9ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

சட்டப்படி எதிர்கொள்வேன்

சட்டப்படி எதிர்கொள்வேன்

இது குறித்து கருத்து கூறியுள்ள ரபியா, சி.பி.ஐ விசாரணையை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே தன்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டப்படி இதை சந்திப்பேன் என்று கூறிய அவர், பாஞ்சோலி தம்பதியர், தங்களின் மகன் சூரஜைக் காப்பாற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X