'பஞ்சு சார்'... ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த தயாரிப்பாளர்!

By Shankar

மறைந்த சாதனையாளர் பஞ்சு அருணாச்சலத்தை எப்போதும் 'பஞ்சு சார்' என்றுதான் திரையுலகினர் குறிப்பிடுவார்கள், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திலிருக்கும் ரஜினி உள்பட.

ரஜினிகாந்துடன் அதிகபட்சமாக 23 படங்களில் பணியாற்றியுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.

அவற்றில் 6 படங்களை தனது பிஏ ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். அவை ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், வீரா.

மீதி 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல விதங்களிலும் பங்காற்றியுள்ளார்.

Panchu Arunachalam, the maker of Superstars

கமல் ஹாஸனுடன் 13 படங்கள் வரை பணியாற்றியுள்ளார். அவற்றில் கல்யாணராமன், உல்லாசப் பறவைகள், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன் போன்றவற்றுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தார்.

ரஜினியும் கமலும் பஞ்சு அருணாச்சலம் படங்களின் மூலம் உச்சம் தொட்டனர். ரஜினியின் நகைச்சுவை உணர்வை மிக அழகாக வெளிப்படுத்த வைத்த படம் தம்பிக்கு எந்த ஊரு.

முரட்டுக் காளை, போக்கிரிராஜா, பாயும் புலி, மனிதன், அடுத்த வாரிசு, தர்மத்தின் தலைவன் போன்ற படங்களின் வெற்றியில் பஞ்சு அருணாச்சலத்தின் பங்களிப்பு மகத்தானது.

தனது புதிய படங்கள் குறித்து ரஜினி தவறாமல் கருத்து கேட்பது பஞ்சு அருணாச்சலத்திடம்தான். அதேபோல படங்களில் இருக்கும் தவறுகளை அவர் சுட்டிக் காட்டும்போது தவறாமல் திருத்திக் கொள்வார் ரஜினி.

பஞ்சு அருணாச்சலத்தின் கடன் பிரச்சினைகளைக் கேள்விப்பட்டதும் உடனடியாக தனது கால்ஷீட்டைக் கொடுத்தார் ரஜினி. அந்தப் படம்தான் வீரா. அந்தப் படத்தின் வெற்றி பஞ்சு சாரின் திரைப் பயணம் தொடர பெரிதும் உதவியது.

Panchu Arunachalam, the maker of Superstars

கமல் ஹாஸன் 4 மணி நேரம் கொண்ட தனது ஹேராம் படத்தை பஞ்சு அருணாச்சலத்திடம் போட்டுக் காட்டியபோது, அதிலிருந்த பெரும்பாலான பகுதிகளை பாரபட்சமின்றி வெட்டி எறியுமாறு அறிவுறுத்தியவரும் பஞ்சு அருணாச்சலம்தான்.

கமர்ஷியல் சினிமாவில் கமல் ஹாஸனுக்கென்று ஒரு பெரிய இடம் கிடைக்க காரணமே பஞ்சு அருணாச்சலம் - எஸ்பி முத்துராமன் கூட்டணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் ரஜினியை வைத்து ஆறிலிருந்து அறுபதுவரை மற்றும் கமலை வைத்து கல்யாணராமன் ஆகிய படங்களுக்கு பூஜை போட்டு இரண்டையுமே பெரும் வெற்றிப் படங்களாக ஆக்கிய ஒரே தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா என்ற பெருமை பஞ்சு அருணாச்சலத்தையே சாரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X