twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம்: 'பாண்டவர் அணி' நாசர்

    By Siva
    |

    புதுக்கோட்டை: கமல் ஹாஸனை அடுத்து ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கோரப் போவதாக பாண்டவர் அணி தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி உள்ளிட்டோர் அடங்கிய சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது.

    Pandavar Ani will meet Rajinikanth soon: Nasser

    சுவாமி சங்கரதாஸ் அணியினர் தேமுதிக தலைர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாஸன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார்கள். இந்நிலையில் பாண்டவர் அணியும் கமல் ஹாஸனை சந்தித்து ஆதரவு கோரியது.

    தனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின் தனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்

    இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டுள்ளது பாண்டவர் அணி. இது குறித்து நாசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் மறுக்கிறார்கள். அதற்கு உள்நோக்கம் உள்ளது. போலீசார் மறுப்பதற்கு பின்னணியில் உள்ளவார்கள் யார்?. இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    நடிகர் சங்க கட்டிடத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடத்தை தனி நபரால் கட்ட முடியாது.

    எங்கள் அணியில் இருந்தபோது கலைநிகழ்ச்சி குறித்து பேசாதவர்கள் தற்போது குற்றம் சாட்டுவது ஏன்?. விரைவில் நடிகர் ரஜினியை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்போம். கடந்த தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

    நடிகர் சங்க தேர்தலை நல்ல முறையில் நடத்த பாதுகாப்பு கோரி சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க மறுப்பதாக நாசர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nasser said that Pandavar Ani is planning to meet Rajinikanth ahead of Nadigar Sangam election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X