ஜனநாயகன் விலகல்.. பராசக்தி படத்துக்கு போட்டியாக வரும் படம்.. இதுவும் ஒரு சக்தியாம்!

சென்னை: பொங்கல் பண்டிகை ரிலீஸிலிருந்து ஜனநாயகன் திரைப்படம் தள்ளி போயிருக்கிறது. இப்போதைய நிலவரப்படி பராசக்தி பத்தாம் தேதி ரிலீஸாகும் என தெரிகிறது. ஆனால் அந்தப் படத்துக்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதேசமயம் இன்று கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. இந்நிலையில் பராசக்தி படத்துக்கு தானும் ஒரு படத்தை வெளியிடப்போவதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

விஜய்யின் ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி பத்தாம் தேதியும் ரிலீஸாவதாக இருந்தது. இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதிலிருந்து விஜய் ரசிகர்கள் எஸ்கேவையும், அவரது ரசிகர்களையும் எவ்வளவு தரக்குறைவாக பேச முடியுமோ அவ்வளவு பேசினார்கள். தியேட்டரில் இருந்த பராசக்தி படத்தின் பேனரையும் கிழிக்க செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores Actor Ravichandran Announces Mahasakthi as Competition to Parasakthi
Photo Credit:

அத்தனைக்கும் ஆப்பு: ஆனால் இப்போது ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சென்சார் சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் இந்த முடிவை வேறு வழியில்லாமல் எடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். நள்ளிரவு ரொம்பவே உருக்கமாக அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டது கேவிஎன் நிறுவனம். பொங்கல் ரேஸிலிருந்து ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போயிருப்பது தளபதி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசி படத்துக்கு இப்படியும் பிரச்னையை கொடுக்கிறார்களே என புலம்புகிறார்கள், திட்டுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். இதற்கு பின்னணியில் அரசியல் காரணம்தான் இருக்கிறது எனவும் குமுறிவருகிறார்கள் அவர்கள். இவ்விஷயத்தில் விஜய்யின் ரியாக்ட் என்னவாக இருக்கும் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பராசக்திக்கும் இதே பிரச்னையா?: அதேபோல் பராசக்தி படத்துக்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே அதுவும் திட்டமிட்டபடி பத்தாம் தேதி ரிலீஸாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், பெரிய பிரச்னைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை; கண்டிப்பாக இன்று சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பத்தாம் தேதி ரிலீஸுக்கான பணிகளை மும்முரமாக செய்துவருகிறார் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். திட்டமிட்டபடி பத்தாம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டால்; ஜனநாயகன் ரிலீஸும் தள்ளிப்போய்விட்டதால் பராசக்திக்கு நல்ல வசூல் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரவிச்சந்திரன்: இந்நிலையில் பராசக்தி படத்துக்கு போட்டியாக மஹாசக்தி என்ற குறும்படத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருமான, பாஜகவை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் வெளியிடவிருக்கிறார். ஹெச்.ராஜா நடித்த கந்தன் மலை வெளியான யூடியூப் சேனலான தாமரை சேனலில்தான் இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்னங்க கொடுமை இது; இவரெல்லாம் போட்டி என்று சொல்லிக்கொண்டு வருகிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

தனியார் ஊடகத்துக்கு பேட்டி: இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கும் அவர் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "திமுகவின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைக்கத்தான் மஹாசக்தி குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்கிற பெயரில் திமுக செய்த பித்தலாட்டங்களை படம் பிடித்து காட்டியிருக்கிறோம். இதில் நடித்திருக்கும் யார் முழு நேர நடிகர்கள் கிடையாது. பராசக்தி வெளியாகும் நாளில் இதனையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார். பார்ப்போம் மஹாசக்தி என்ன செய்யும் என்பதை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X