ஷாக்கிங்.. ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’முல்லை இனி இல்லை.. ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை #RIPChitra
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 28.
Recommended Video
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த இவரது மீடியா பயணம், வேந்தர் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என நீண்டது.
சின்னப் பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
விரைவில் சென்னையை சேர்ந்த ஹேம்நாத் என்பவருடன் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளினியாக அறிமுகம்
1992ம் ஆண்டு மே 2ம் தேதி சென்னையில் பிறந்தவர் சித்ரா. கல்லூரி படிப்பை முடித்த பின்னர், 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் சித்ரா. பின்னர், நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர், வேந்தர் டிவி, ஜீ தமிழ், சன் டிவி மற்றும் விஜய் டிவியிலும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

சின்னத்திரை நடிகையாக
சன் டிவியில் ஒளிபரப்பான சின்னப் பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்து சின்னத்திரை நடிகையாக பிரபலமான சித்ரா, விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிருக்கு ஜோடியாக முல்லையாக நடித்து மக்கள் மனங்களை கவர்ந்திருந்தார். அவரது திடீர் தற்கொலை ஒட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விரைவில் திருமணம்
கடந்த செப்டம்பர் மாதம் தான் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் விஜே சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென விஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. ஹோட்டல் அறையில் ஹேம்நாத்தும் உடனிருந்தார் எனக் கூறப்படுகிறது.

தூக்கிட்டுத் தற்கொலை
சீரியல் ஷூட்டிங்கில் நடித்து முடித்து விட்டு, நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிகாலை 2.30 மணிக்கு தனது வருங்கால கணவருடன் வந்து தங்கி உள்ளார் சித்ரா. குளிக்கப் போகிறேன், நீங்க வெளியே இருங்க என சொல்லி விட்டு, நீண்ட நேரம் க்தவு திறக்காமல் இருந்த நிலையில், ஹோட்டல் அறையை திறக்க முயற்சித்து முடியாமல், ஊழியர்களை அழைத்து இன்னொரு சாவி மூலமாக அறையை திறந்ததும் சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு ஹேம்நாத் அதிர்ந்து போனதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

என்ன காரணம்
அடுத்த மாதம் திருமணம் ஆகவுள்ள நிலையில், வருங்கால கணவருடன் ஹோட்டல் அறையில் வந்து தங்கிய நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏதும் இதுவரை தெரியவில்லை. அவரது தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகத்தில் ரசிகர்கள்
பிரபல விஜே மற்றும் சின்னத்திரை நடிகையான சித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். ஏகப்பட்ட போட்டோஷூட் போட்டோக்கள், முல்லை கதாபாத்திரம் என ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்த சித்ரா திடீரென உயிரிழந்ததை அறிந்த ரசிகர்கள் #RIPChitra என்ற ஹாஷ்டேக்கை போட்டு ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











