Don't Miss!
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Automobiles
இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!
- News
74வது குடியரசுத் தினம்.. அக்னி வீரர்கள் முதல் பெண் BSF வீராங்கனைகள் வரை! விழாவில் ஏகப்பட்ட புதுமைகள்
- Finance
சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?
- Lifestyle
40 வயசு ஆயிடுச்சா? மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
மார்பகத்தில் கட்டி.. வலி தாங்க முடியல.. பதறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!
சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார் மார்பக கட்டியால் அவதிபட்டதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன்,வெங்கட் ரங்கநாதன், காவியா, ஹேமா ராஜ்குமார் சரவணன் விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இனிமேல் என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியாது..தாறுமாறாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி இந்த சீரியல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த சீரியலாக உள்ளது. இயல்பாக குடும்பத்தில் நடக்கும் சண்டையையும், மனகசப்பையும், உறவுக்குள் ஏற்படும் சிக்கல்களையும் இந்த சீரியல் எடுத்துக்காட்டுகிறது. இந்த சீரியலில் வரும் கதாபாத்திரத்தை ரசிகர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர்.

அனைவரும் பிடித்த சீரியல்
குறிப்பாக இந்த குடும்பத்தின் மூத்த மருமகளாக வரும் தனம், கணவரின் தம்பியையும், அவர்களின் மனைவியையும் அன்பால் அரவணைத்து குடும்பம் சிதைத்து போகாமல் காத்து வருகிறாள். பல இல்லத்தரசிகளுக்கு இந்த சீரியல் மிகவும் பிடித்துப்போனதால் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

மார்பகத்தில் கட்டி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார். ட்விட்டர், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ஹேமா, சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடித்து வருகிறார். அதில், கடந்த ஆண்டு மார்பகத்தில் கட்டி இருந்ததால், அதை ஆப்ரேஷன் மூலம் அகற்றிவிட்டேன். ஆனால், மாதம் தோறும் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தேன்.

கடுமையான வலி
கடந்த சில மாதமாக வேலை பளு காரணமாக பரிசோதனைக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதனால், திடீரென மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டதால், மிகவும் பதறிப்போனேன், டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு, இது ஹார்மோன் சேஞ் காரணமாகவே வரும் வலிதான் என்று கூறிய பிறகு தான் உயிரே வந்தது. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் மார்பக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வீடியோவை எடுத்ததாக ஹேமா ரவிச்சந்திரன் கூறினார்.