முல்லையை மறக்க முடியாமல் தவிக்கும் மீனா.. சித்துவுடன் ரயிலில் பயணித்த வீடியோவை ஷேர் செய்து உருக்கம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்ட விஜே சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து அவரது தோழியும் சக நடிகையுமான ஹேமா ராஜ் சதீஷால் மீளவே முடியவில்லை.
கடந்த டிசம்பர் 9ம் தேதி பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
4 அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருப்பதும் அவர்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளும் என்கிற ரீதியில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக முல்லையாக நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா.

சோகத்தில் நண்பர்கள்
விஜே சித்ரா ஹோட்டல் அறையில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் சோகக் கடலில் ஆழ்ந்துள்ளனர். எப்போதுமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் சித்ரா, தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என ஏகப்பட்ட சக நடிகைகள் வீடியோ வெளியிட்டது பரபரப்பை கிளப்பியது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாராஜ் சதிஷ், விஜே சித்ராவின் நெருங்கிய தோழி மற்றும் சக நடிகை. ஒரே குடும்பமாக அந்த சீரியலில் நடித்து வந்தவர்கள், திடீரென ஒருவர் உயிரிழந்ததும் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து விஜே சித்ராவின் நினைவலைகளை பகிர்ந்து வருகிறார் ஹேமா.
ரயில் பயண வீடியோ
இந்நிலையில், தற்போது நடிகை ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜே சித்ராவுடன் ரயிலில் வெளியூர் ஷூட்டிங்கிற்கு சென்ற வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு இருப்பதும், சித்ரா க்யூட்டாக சிரிப்பதையும் பார்த்த ரசிகர்கள் ரொம்பவே உடைந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நெயில் பாலிஷ் போடும் சித்து
அந்த வீடியோவில் சித்து அணிந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் டீ சர்ட் முழுவதும் "லவ்.. லவ்.. லவ்" என எழுதப்பட்டுள்ளது மேலும் ரசிகர்களை உணர்ச்சிவசப்படச் செய்துள்ளது. அழகாக தனது கைகளில் ஓடும் ரயிலிலேயே, நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு ஹேமா கலாய்ப்பதற்கு வாயை திறந்து ஒரு மாதிரி ரியாக்ஷன் பண்ணி சிரிக்கும் சித்ராவை ஹேமா ரொம்பவே மிஸ் பண்ணுகிறார். Life is Unfair என்ற கேப்ஷனோடு பிரேக்கிங் ஹார்ட் எமோஜியையும் ஹேமா பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











