ஒரே வீட்டுக்குள்ள இரண்டு கொண்டாட்டம்.. அக்காவும் தங்கச்சியும்.. அடடா அடடா!

சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அக்கா தங்கச்சியாக நடித்துக்கொண்டிருக்கும் சுஜாதாவும் ஹேமாவும் ஒன்றாக பிறந்த நாள் கொண்டாடி இருக்கின்றனர்.

சீரியல் மட்டும் தான் நாங்க அப்படி நிஜத்தில் நாங்க வேற மாதிரி என குடும்பம் மொத்தமும் ஆரவாரத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

ஒருவர் புடவையில் கொண்டை போட்டுக் கொண்டும், ஒருவர் சுடிதாரில் தலையை விரித்துக் போட்டபடி கேக் வெட்டியும் என மாறி மாறி ஊட்டி கொண்டனர்.

துடுக்கு மீனா

துடுக்கு மீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர் .அதுவும் குடும்பத்தின் மூத்த மருமகள் தனமாக நடிக்கும் சுஜிதாவுக்கும், இரண்டாவது மருமகளான மீனாவாக நடிக்கும் ஹேமாவுக்கும் கொஞ்சம் அதிகமாகதான் ரசிகர்கள் இருக்கின்றனர் .ஒருவர் அமைதியின் சொரூபம் .இன்னொருவர் துடுதுடுப்புக்காரர் .இவர்கள் இருவரையுமே அனைவருக்கும் பிடிக்கும்.

குடும்பப் பாங்கு

குடும்பப் பாங்கு

இந்த சீரியல் குடும்ப ஒற்றுமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களாக இருந்தாலும் சரி நகரங்களாக இருந்தாலும் சரி அனைவருமே தனிகுடித்தனத்தையே விரும்புகின்றனர் . அதனால் குழந்தைகளும் வளரும் சந்ததியில் கூட்டுக் குடும்பத்தை மறந்து தனிக்குடும்பம் ஆகவே வளர்ந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் போலவே பல சீரியல்களும் திரைப்படங்களும் வந்திருந்தாலும் .மறைந்து கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை இந்த சீரியலில் பார்ப்பதாலும் என்னவோ பலருக்கும் இந்த சீரியல் பிடித்திருக்கிறது.

மனதில் வாழும் இருவர்

மனதில் வாழும் இருவர்

ஆனாலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களை தற்போது அவர்கள் நடிக்கும் கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகின்றனர் .அதிலும் இந்த குடும்பத்திற்காகவே தனது ஆசைகளை எல்லாம் துறந்த தனத்தை தான் பல குடும்பப் பெண்களுக்கும் பிடித்துக் கொண்டிருக்கின்றது. இவருக்கு மாமியார்களிடம் வரவேற்பு என்றால் இந்த வீட்டின் இரண்டாவது மருமகளாக இருந்தாலும் என்னுடைய உரிமையை விட்டுவிட மாட்டேன் என அடிக்கடி வீட்டிற்குள் ரகளை செய்து கொண்டிருக்கும் மீனாவையும் மருமகள்களுக்கு பிடித்திருக்கிறதாம்.

மாறி மாறி

மாறி மாறி

தற்போது இந்த சீரியலின் பண்டிகை காலமாக இருந்து வருகிறது தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதில் சுஜிதாவுக்கும் ஹேமாவுக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .இருவருக்கும் தனித்தனியாக கேக் வைத்து கேக்கை கட் பண்ணி மாறி மாறி ஊட்டிக் கொண்டனர்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

அதுவும் இவர்களின் பிறந்தநாளுக்கு இருவரின் ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் அதிகமான வாழ்த்து போஸ்ட்களை போட்டு வருகின்றனர் .அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஹேமாவும் தன்னுடைய நன்றிகளை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் .ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடன் நடிக்கும் நடிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X