Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்று முல்லைக்கு பிறந்தநாள்... விஜே சித்ரா குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர் உருக்கமான பதிவு!
சென்னை: மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி மக்களிடம் பிரபலமானவர் விஜே சித்ரா.
விஜே, சீரியல் நடிகை என பன்முகத்திறமையாளராக வலம் வந்த சித்ரா, திடீரென 2020ம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார்.
விஜே சித்ராவின் தற்கொலை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.
உங்க
வேலையை
நீங்க
பாருங்க...
என்ன
இப்படி
சொல்லிட்டாங்க
விஜே
அர்ச்சனா!

சின்ன திரை தேவதை விஜே சித்ரா
மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மக்களிடம் அறிமுகமான விஜே சித்ரா, தனது திறமையால் அடுத்தடுத்து உச்சம் தொட்டார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், டார்லிங் டார்லிங், வேலுநாச்சி போன்ற சீரியல்களில் நடித்துள்ள விஜே சித்ராவுக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதுவரை சின்ன திரையின் தேவதையாக வலம் வந்த விஜே சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முல்லை கேரக்டர் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

திடீரென தற்கொலை
எப்போதும் தனது முத்துப் பற்கள் தெரிய சிரிப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்த சித்ரா 2020ம் ஆண்டு டிசம்பரில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து கால்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். அப்போது ஹேமந்த் என்பவரை 2020ம் ஆண்டில் பதிவு திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் சித்ரா, நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இயக்குநர் உருக்கமான பதிவு
சித்ராவும் ஹேமந்தும் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில், சித்ராவின் தற்கொலை சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பியது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குநர் சிவசேகர், சித்ரா குறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "இன்று முல்லை பிறந்தநாள். ஆம்! நான் இயக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் பிறந்தநாள்" என குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவு
மேலும், "ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தின் பிறந்தநாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது திரையுலகில் புதுமை!. கதையில் முல்லையாக வாழ்ந்து சிறப்பாக உருவம் கொடுத்த சித்துவுக்கு பெருமை!! ரசிகர்களின் ரசனை மிகவும் அருமை!!! என் தொடருக்காக சித்துவை முல்லையாக மாற்றியத் தருணம் 2018 ஜூன் மாதத்தின் ஒருநாள். .அன்றைய தினம் முல்லையின் திருமணத்துக்கு முன்பு... திருமணத்துக்கு பின்பு... என இருவிதமாக ஒப்பனை செய்து, எடுக்கப்பட்ட புகைப்படங்களை முல்லையின் நினைவுகளோடு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சித்து எனக்கு அறிமுகமானதும் அன்றைய தினமே. இந்நாளில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். முல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.