Thalaivan Thalaivii Public Review: தலைவன் தலைவி தரமான படம்.. பொதுமக்கள் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாக தலைவன் தலைவி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இதில், யோகி பாபு, தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கணவன் மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் பற்றி பொதுமக்களின் கருத்தை கேட்கலாம்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், தலைவன் தலைவி திரைப்படம் நன்றாக இருக்கிறது. வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு வந்து பார்ப்பதற்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும். வழக்கம் போல விஜய் சேதுபதியும், நிக்யா மேனனும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவை அதிகமாகவே இருக்கிறது. படம் பார்த்தவர்கள் சிரித்துக் கொண்டே வெளியே வரலாம். யோகி பாபு நன்றாக நடித்து இருக்கிறார். நித்யா மேனன் வழக்கமாக அனைத்து படங்களிலும் நன்றாக நடிப்பார்கள். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை ஓவர் டெக் செய்து நடித்திருக்கிறார் என்றார்.

பொதுமக்கள் விமர்சனம்: படம் பார்த்த மற்றொரு பெண், இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் எதார்த்த வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். விவாகரத்து பெற்று பிரிந்து இருப்பவர்கள் இந்த படத்தை பார்த்தால் சேர்ந்து வாழ்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. படத்தினுடைய ஸ்கிரீன் பிளே சிறப்பாக உள்ளது. அதேபோல, யாருமே எதிர்பாக்காத வகையில் ஒரு நல்ல கிளைமாக்ஸை கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது படம் பார்த்த திருப்தியும், மனநிறைவும் இருக்கிறது என்றார்.
காமெடிக்கு பஞ்சமில்லை: மற்றொருவர், கடைக்குட்டி சிங்கம் மிகவும் உருக்கமான எமோஷனலான திரைப்படமாக இருக்கும். ஆனால் இந்த திரைப்படம், நகைச்சுவை கலந்த எமோஷனலாக நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தில் ஒரு இடத்தில் கூட லெகிங் இல்லை. படம் முழுக்க சுவாரஸ்யமாகவே இருந்தது. படத்தின் கதை என்னமோ நார்மலாக இருந்தாலும் அதை சுவாரஸ்யமாக நல்ல திரைக்கதை அமைத்து எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர்.
ஈகோ இருக்கக்கூடாது: மற்றொரு சினிமா பிரியர், தலைவன் தலைவி திரைப்படத்தை குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம். ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை இயக்குநர் பாண்டியராஜ் அழகாக சொல்லி இருக்கிறார். கணவன் மனைவி இடையே ஈகோ இருக்கக்கூடாது. ஈகோ இல்லாமல் இருந்தால் குடும்பம் நன்றாக இருக்கும். படத்தில் வரும் ஒரு வசனம் மனதை கரைத்துவிட்டது. அதாவது விஜய் சேதுபதி, நித்யாமேனனை பார்த்து பிள்ளையை பெத்து கொடுக்க சொன்னா, தெய்வத்தைப் பெத்து கொடுத்து இருக்க என்று சொல்வார். மனைவியை தவிர இப்படி ஒரு விஷயத்தை யாராலும் செய்ய முடியாது. இது ஒரு வசனத்திலேயே இயக்குநர் நின்றுவிட்டார். அவர் எவ்வளவு தூரம் மக்களோடு மக்களாக பயணம் செய்து மக்களின் மனநிலையை புரிந்து இருக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











