twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்

    By Siva
    |

    Recommended Video

    போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5-க்கும் மேற்பட்டோர்- வீடியோ

    சென்னை: ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது தூத்துக்குடியில் மக்களின் உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது என்று இயக்குனர் பாண்டிராஜ் கொந்தளித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து வள்ளிகாந்த் இயக்கியுள்ள செம படத்தை பாண்டிராஜ் எழுதி தயாரித்துள்ளார். செம படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கோபம்

    கோபம்

    இந்த விழா நடத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைட் விஷயம் நடந்தது வேதனையாக உள்ளது. ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது. அரசின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. தமிழகம் எங்கு செல்கிறது என்றே தெரியவலில்லை. கடவுளுக்கே வெளிச்சம் என்று நிகழ்ச்சியில் பேசிய பாண்டிராஜ் தெரிவித்தார்.

    ஜிவி பிரகாஷ்

    ஜிவி பிரகாஷ்

    தூத்துக்குடி மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டத்தில் உயிரை கொள்வது கேவலமான விஷயம். நியாயமாக போராடியபோது இப்படி செய்தது மனிதாபிமானம் இல்லாத செயல். இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது காட்டுமிராண்டித்தனம் என்று ஜிவி பிரகாஷ் குமார் கொந்தளித்துள்ளார்.

    கோபம்

    சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest என்று ஜிவி பிரகாஷ் தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

    உயிர்

    சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டு போராடியவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

    English summary
    Director Pandiraj and GV Prakash Kumar have expressed their anger over killings in Tuticorin at the audio launch of their upcoming movie Semma.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X