மீண்டும் அந்த சூப்பர் ஹிட் இயக்குனருடன் மூன்றாவது முறை கூட்டணி அமைக்கும் சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது.

இவ்விரு திரைப்படங்களை தொடர்ந்து சூர்யாவுக்கு அடுத்து அடுத்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த அந்த சூப்பர்ஹிட் இயக்குனரின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பல வசூல் சாதனைகளை

பல வசூல் சாதனைகளை

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவிற்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு என மற்ற மொழிகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வர இவரது திரைப்படங்கள் மற்ற மாநிலங்களிலும் ஒருசேர வெளியாகி அங்கும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

ஆஸ்கர் பட்டியலிலும்

ஆஸ்கர் பட்டியலிலும்

காப்பான் சுமாரான வெற்றியை கொடுத்ததை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான சூரரைப்போற்று எதிர்பார்த்ததை விடவும் தரமான திரைப்படமாக வெளியாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் ஆஸ்கர் பட்டியலிலும் இடம் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது. இந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கைகூடாமல் போனது

கைகூடாமல் போனது

விஜய்யுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி ஹிட்டுக்கு மேல் ஹிட்டுகளை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மட்டுமல்லாமல் ஹிந்தி பட துறையிலும் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட்டிலும் மாஸ் காட்டிவரும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்க இருந்தார் ஆனால் அது கைகூடாமல் போனது.

ஏ ஆர் முருகதாஸ் உடன் கூட்டணி

ஏ ஆர் முருகதாஸ் உடன் கூட்டணி

நடிகர் சூர்யாவுடன் 2005 இல் முதல் முறையாக இணைந்த கஜினி திரைப்படம் இருவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக கஜினி இருக்க இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. கஜினியை தொடர்ந்து ஏழாம் அறிவு படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்து இந்த கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்பொழுது மூன்றாம் முறையாக இணைய உள்ளது.

பாண்டிராஜ் இயக்கம்

பாண்டிராஜ் இயக்கம்

அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் சூர்ய அதை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் நவரசா ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த திரைப்படம் மிகவும் புதுமையான கதை களத்தை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வரும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X