ஓவியா அழகா இல்லையா? - பாண்டிராஜ் பதில்
இந்தப் படம் குறித்து நிருபர்கதளிடம் பேசினார் பாண்டிராஜ். அவர் கூறுகையில், "பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படக் கம்பெனி தொடங்கி மெரினா படத்தை நானே தயாரிக்கிறேன். வெறும் ஒரு லட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு தயாரிப்பில் இறங்கி விட்டேன். திரை மறைவில் நிறைய பேர் உதவுகிறார்கள்.
மெரினா படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடிக்கின்றனர். மெரினா கடற்கரையில் திரியும் சிறுவர்கள் பற்றிய கதை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி முக்கியம் என்பதை படத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
பட்டினப்பாக்கத்தில் இருந்து காசிமேடு வரை கடற்கரை பகுதியில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். 'வணக்கம் வாழ வைக்கும் சென்னை' என்ற பாடலை வித்தியாசமாக எடுத்துள்ளோம். விக்ரம் பாடி கொடுத்தார். விமலை ரோட்டில் ஆட வைத்து எடுத்தோம். சசிகுமார், சினேகா போன்றோரும் ஆடியுள்ளனர்," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஓவியா பொதுவாகவே மேக்கப் பிரியை. எப்போதும் மேக்கப் மயம்தான். என் படங்களின் ஹீரோயின்களுக்கு மேக்கப் போட விடவே மாட்டேன். ஆனால் இந்தப் படத்துக்காக விட்டுவிட்டேன்," என்றார். உடனே அவரிடம், அப்படியென்றால் ஓவியா அழகாக இல்லை என்கிறீர்களா? என்று கேட்க, பதறிப் போனார் பாண்டிராஜ்.
"இந்த வம்பே வேணாம். ஓவியா இயற்கையிலேயே அழகானவர்தான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அவர்களுக்கு மேக்கப் அவசியமில்லை என்பதற்காக இதைச் சொன்னேன்," என்றார்.


Click it and Unblock the Notifications












