சிவகார்த்திகேயன் படம் மூலம் நடிகர் ஆகும் பாண்டிராஜ் மகன்

By Siva

சென்னை: நம்ம வீட்டுப் பிள்ளை படம் மூலம் இயக்குநர் பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு நடிகராகியுள்ளார்.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களை அடுத்து சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டிராஜ் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.

Pandirajs son makes his debut in Namma Veettu Pillai

ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் சகோதரியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து சூரி, நரேன், யோகி பாபு, சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, ஆர்.கே. சுரேஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுனும் உள்ளார். இந்த படம் மூலம் பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு நடிகராகியுள்ளார். செகண்ட் லுக் போஸ்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் அருகில் நிற்கும் சிறுவன் தான் பாண்டிராஜின் மகன்.

Pandirajs son makes his debut in Namma Veettu Pillai

அன்புக்கரசு என்கிற பெயரை பார்த்ததுமே பசங்க படத்தில் வந்த அன்புக்கரசு ஐ.ஏ.எஸ். தான் நினைவுக்கு வருகிறார். இந்த அன்புக்கரசு நடிப்பில் எப்படி என்பது படம் வெளியான பிறகு தெரிந்துவிடும்.

பாண்டிராஜ் படங்களில் குட்டீஸ்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்பதால் அன்புக்கரசுக்கு நிச்சயம் நாலு வசனமாவது நச்சென்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் இரண்டாவது போஸ்டரை பார்த்ததும் இது குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேரும் என்று நம்பப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம் என்று நம்பிக்கையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X