தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தியதா சூர்யா 40 ? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Suriya 40 படத்தின் கதை என்ன தெரியுமா? Pandiaraj, Suriya, Vetrimaran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வெளியானது.

ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

இந்நிலையில் நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் பெயர் வெளியிடப்படாத நிலையில் சூர்யா 40 என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்ற நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா 40 படம் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள்

பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து சில உண்மையான சம்பவங்களை இயக்குநர் படத்தில் காட்சியாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாவின் ரோல் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுவதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

ஆனால் இந்த தகவல்கள் எதுவும் படக்குழுவினரால் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் படத்தின் போஸ்டரில் சூர்யா துப்பாகி மற்றும் கத்தியுடன் இருப்பது தெரிய வந்தது. இந்த போஸ்டரே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

சூர்யா 40 படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் ஜூலையில் தொடங்கும் என தெரிகிறது. மேலும் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இமான் இசை

இமான் இசை

சூர்யா 40 படத்தி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன், சிபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X