விட்டா இனி ஊமைப்படம் தான் எடுக்கணும்னு சட்டம் போடுவாங்க போல?: பாண்டிராஜ் #Mersal
சென்னை: விட்டா இனி ஊமைப்படம் தான்(பேசா படம்) எடுக்க வேண்டும் என்று சட்டமே போடுவார்கள் போல??? என்று மெர்சல் விவகாரம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி வசனம் பேசியுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நியாயம்
சென்சார்போர்டு குழுவில் மத்திய, மாநில அரசுகளின் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் உள்ளே இருந்து, படத்தை பார்த்து, விவாதித்த பிறகு தான் ஒப்புதல் அளிப்பார்கள். அப்படி வந்த படத்தின் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்?!!!
நாடு எங்கே செல்கிறது???
விட்டா இனி ஊமைப்படம் தான்(பேசா படம்) எடுக்க வேண்டும் என்று சட்டமே போடுவார்கள் போல???
கமெண்ட்
இனிமே எல்லாரும் கார்ட்டூன் தான் பாக்கணும் போல ணா
உண்மை
சாப்ளினின் ஊமைப்படங்கள் கூட அரசியல் பேச தயங்கியதில்லை தோழர். அரசியல்வாதிகள் அன்று முதல் இன்று வரை நடிகர்களின் வீச்சை கண்டு நடுங்குவதே உண்மை
செய்கை
ஊமைப் படத்திலும் GSTக்கு எதிரான சைகைகள் அனுமதிக்கப்படாது.
இந்தியன் 2
மெர்சலுக்கே அழுதா எப்படி...இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கு...


Click it and Unblock the Notifications











