கடைக்குட்டி சிங்கம் ஹிட்: குலதெய்வத்திற்கு கிடா வெட்டி பொங்கல் வைத்த பாண்டிராஜ்

By Siva

சென்னை: கடைக்குட்டி சிங்கம் ஹிட்டானதை அடுத்து குலதெய்வத்திற்கு கிடா வெட்டியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த கடைக்குட்டி சிங்கம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது. படத்தில் நான் விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் கார்த்தி பெருமை அடைந்ததை பார்க்கவே நன்றாக இருந்தது.

இந்நிலையில் படம் குறித்து பாண்டிராஜ் கூறியிருப்பதாவது,

இயக்குனர்

இயக்குனர்

நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். என் தந்தை ஒரு விவசாயி. ஆனால் சில காரணங்களால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை. நான் இயக்குனராகிவிட்டேன், என் சகோதரர் சைக்கிள் வியாபாரம் செய்கிறார். ஆனால் இந்த தொழிலில் எத்தனை காலம் இருப்பேன் என்று தெரியவில்லை.

படம்

படம்

ஒரு நாள் என் கிராமத்திற்கே திரும்பிச் சென்று விவசாயம் செய்ய விரும்புகிறேன். விவசாயம் குறித்து படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதுமே இருந்தது. இந்த படத்தில் விவசாயிகளின் பிரச்சனைகளை காண்பிக்காமல் தன் தொழிலை நினைத்து விவசாயி எப்படி பெருமைப்பட வேண்டும் என காண்பித்துள்ளேன். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான். ஆனால் விவசாயிகளின் சுமையை குறைக்க நாம் எதுவுமே செய்யவில்லை.

பாராட்டு

பாராட்டு

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு படத்தை பாராட்டியது மிகப் பெரிய கவுரவம். ஐடி ஊழியர்கள் முதல் என் விவசாய நண்பர்கள் வரை பலருக்கும் படம் பிடித்துள்ளது. விவசாயத்தை மதிப்புடன் பார்க்க கற்றுக் கொடுத்துள்ளோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 20 ஆண்டுகள் கழித்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததாக ஒரு 70 வயது மூதாட்டி என்னிடம் தெரிவித்தார். திரைத்துறை சேர்ந்தவர்களுக்கும் படம் பிடித்துள்ளது. நான் பக்கா கிரமாத்துக்காரன். 20 ஆண்டுகள் கிராமத்தில் இருந்தவன். அதனால் கிராமத்து பின்னணியில் படம் எடுப்பது எனக்கு எளிது என்றார் பாண்டிராஜ்.

கிடா வெட்டி பொங்கல்

கிடா வெட்டி பொங்கல்

கடைக்குட்டி சிங்கம் வெற்றி பெற்றதையடுத்து தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விராச்சிலைக்கு சென்று அங்குள்ள குலதெய்வம் கோவிலுக்கு குதிரை எடுத்து கிடா வெட்டி பொங்கல் வைத்துள்ளார் பாண்டிராஜ். இந்த கொண்டாட்டத்தில் அவரது உறவினர்கள், ஊர்க்காரர்கள் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X