சிம்புவுக்காக ‘தேவதை’ மாதிரி பெண் தேடும் பாண்டிராஜ்

சென்னை: 'பசங்க' பாண்டிராஜின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கான வேலைகள் சுறுசுறுப்பாகத் தொடங்கி விட்டன. இப்படத்தை சிம்புவே தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக இருக்கிறார். இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் படத்திற்கான கதாநாயகி தேர்வு செய்யப் படவில்லையாம்.

காதல் காட்சிகள்....

காதல் காட்சிகள்....

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் கேட்டில் சாய்ந்த படி, சிம்பு திரிஷாவைப் பார்க்கும் காட்சிகளைப் போல், இப்படத்தில் சிம்பு தனது காதலியுடன் போனில் பேசும் காட்சிகள் ரசிகர்களைக் கவரும் எனச் சொல்லப் படுகிறது.

காதல் தேவதை...

காதல் தேவதை...

இப்படத்தில் போனில் பேசி பேசிக் காதலிக்கப் போகிறாராம் சிம்பு. அப்படிக் காதலிக்கும் பெண் மிகச் சிறந்த தேவதையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு...

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு...

கதாநாயகி கிடைத்தால் தான் படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பைத் தொடங்க இயலும். இதனால் படத்தில் சிம்பு சமப்ந்தப் பட்டகாட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டு காத்திருக்கிறார் பாண்டிராஜ்.

எங்கயிருக்க ஏஞ்சல்....

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாண்டிராஜ் தெரிவித்திருப்பதாவது, ‘ஹீரோயின் யாருனு இன்னும் எங்களுக்கே தெரியல...ஏஞ்சல் மாதிரி ஒரு பொண்ணு வேணும்... வெயிட்டிங்..!!' என பதிவு செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X