அவரும் இல்லை.. இவரும் இல்லை.. தளபதி 65 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?
சென்னை: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வி தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர் ஏன் பேரரசு பெயர் வரை தளபதி 65 படத்திற்கு அடிபட்டது.
ஆனால், தற்போது தளபதி 65 படம் கிராமத்து படமாகவும் குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகப் போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம்
தலைவர் 168 படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது உறுதியாகி விட்டது. சர்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய்யின் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் ரெடியாகி வருகிறது.

அவரும் இல்லை இவரும் இல்லை
தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் அல்லது ஷங்கர் இருவரில் யாராவது ஒருவர் இயக்குவர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது இருவரும் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், தளபதி 65 படத்தில் வேற லெவல் விஜய்யை ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க உள்ளனர்.

கிராமத்து படம்
தளபதி 65 கிராமத்து கதையம்சம் கொண்ட குடும்ப டிராமாவாக செம்ம ஜாலியாகவும் மாஸ் என்டர்டெயினராகவும் உருவாகப் போகிறதாம். திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம், காவலன் படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் கிராமத்து சப்ஜெக்டில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்தான் இயக்குநர்
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை என கிராமத்து சப்ஜெக்ட் படங்களை இயக்கி கலக்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் தான் விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் இயக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.

இதுதான் பொங்கல் பரிசா?
தளபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக இந்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திபாவளி ரிலீஸ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகவுள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு தளபதி 65 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமர்ஷியல் என்டர்டெயின்மென் ட்
கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போல முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட்டாக பெரிய கூட்டுக் குடும்பத்துடன் விஜய் நடிப்பில் தளபதி 65 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











