'விரைவான மற்றும் வெற்றிப்படமாக அமையட்டும்' வாலு கூட்டணியை வாழ்த்திய பாண்டிராஜ்
சென்னை: சிம்பு, விஜய் சந்தர் மீண்டும் இணைந்திருக்கும் படத்திற்கு தன்னுடைய பாணியில் இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்தியிருக்கிறார்.
வாலு படத்திற்குப் பின் சிம்பு, விஜய் சந்தர் மீண்டும் இணைந்திருக்கும் படத்தின் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில் 'விரைவான மற்றும் வெற்றிப்படமாக அமையட்டும்' என்று இப்படத்திற்கு, இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
சிம்புவை வைத்து கடந்த 2013 ம் ஆண்டு பாண்டிராஜ் தொடங்கிய இது நம்ம ஆளு திரைப்படம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
அதேபோல சிம்பு-வாலு சந்தர் முதலில் இணைந்த வாலு படமும் 3 ஆண்டுகள் கழித்து தான் வெளியானது. இதனைத் தான் தற்போது பாண்டிராஜ் மறைமுகமாக கலாய்க்க செய்திருக்கிறார்.
பாண்டிராஜின் இந்த வாழ்த்திற்கு விஜய் சந்தர் நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால் சிம்பு இதுகுறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











