அஞ்சாதே படத்தைத் தொடர்ந்து ‘சாலையோரம்’ படத்தில் வில்லனாக மிரட்டும் பாண்டியராஜன்

சென்னை: அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பாண்டியராஜன், சாலையோரம் என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இப்படத்தை பி.வாசுவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மூர்த்தி கண்ணன் டைரக்டு செய்கிறார்.

தனது காமெடி மற்றும் குடும்பப்பாங்கான படங்கள் மூலம் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றவர் இயக்குநரும்,நடிகருமான பாண்டியராஜன். பிரபல நாயகனாக வலம் வந்த பாண்டியராஜன், இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

பின்னர், மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா மற்றும் அஜ்மல் நடிப்பில் வெளியான அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதுவரை காமெடி நடிகராக மட்டுமே அறியப் பெற்ற பாண்டியராஜனின் வில்லத்தனமும் மக்களைக் கவரத் தான் செய்தது.

மீண்டும் வில்லன்....

மீண்டும் வில்லன்....

எனவே, தற்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் பாண்டியராஜன். சாலையோரம் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் புதுமுகங்கள் ராஜ்-செரீனா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, முத்துக்காளை லொள்ளு மனோகர், மலையாள நடிகர் நசீர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை....

இசை....

சிங்கப்பூர் தமிழரான சேதுராம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். தினேஸ் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்புராயன் தயாரிக்கிறார்.

அப்பா பாடல்....

அப்பா பாடல்....

இப்படத்தில், அப்பாவை பற்றிய பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாம். அதனை டைரக்டர் மூர்த்தி கண்ணன் எழுதியிருக்கிறார்.

குப்பைக்கிடங்குகளில் படப்பிடிப்பு....

குப்பைக்கிடங்குகளில் படப்பிடிப்பு....

சாலையோரம் படத்தின் பெரும்பகுதி சென்னை புறநகரில் அமைந்திருக்கும் குப்பை கிடங்குகளில் படமாக்கப் பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X