குறும்படம் தயாரித்த பாண்டியராஜனுக்குப் பாராட்டு!
மகன் என்ற குறும்படத்தை தனது மகனை வைத்து தயாரித்து, இயக்கிய நடிகரும், இயக்குநருமானபாண்டியராஜனுக்கு தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் மார்க்கெட் இப்போது சூடாக இல்லாவிட்டாலும், சப்தம் போடாமல்தனது மகன் பிரேமராஜனை வைத்து மகன் என்ற பெயரில் ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளார்.
விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ள இக் குறும்படத்தைத் தயாரித்து, இயக்கியபாண்டியராஜனுக்கு, தென்னிந்திய இயக்குநர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இயக்குநர்கள்கே.பாலச்சந்தர், விசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பாண்டியராஜனுக்கு கேடயம் வழங்கினர்.
இதேபோல, தேசிய விருது பெற்ற றெக்கை, ஊருக்கு 100 பேர்’ என்ற குறும்படங்களை இயக்கிய, பிரபலஎடிட்டர் பி.லெனினும் நிகழ்ச்சியின்போது பாராட்டப்பட்டார்.


Click it and Unblock the Notifications











