நிலநடுக்கத்தில் முளைத்த காதல்.. தவிக்கும் குடும்பம்.. டிவிட்டரை திணறடிக்கும் பாண்டியா ஸ்டோர்!

சென்னை: இந்தியில் ஒளிபரப்பாகும் பாண்டியா ஸ்டோர் சீரியலின் புரமோ ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளிலும் தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

பாண்டியா ஸ்டோர்

பாண்டியா ஸ்டோர்

பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்களை நம்யியே உள்ளன. இல்லத்தரசிகளின் முக்கிய பொழுது போக்காக டிவி சீரியல்களே உள்ளன. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை போன்றே வட இந்தியாவில் பாண்டியா ஸ்டோர் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு இளசுகள் முதல் பெருசுகள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த சீரியலில் கவுதம் மற்றும் தாரா பாண்டியா ஆகியோர் மிடில் கிளாஸ் தம்பதிகளாக உள்ளனர்.

பல டிவிஸ்டுகள்

பல டிவிஸ்டுகள்

இவர்கள் பாண்டியா ஸ்டோர் என்ற கடையை நடத்தி வருகின்றனர். தாரா தொழிலை பார்ப்பதோடு கணவரான கவுதம்மின் 3 சகோதரர்களையும் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் வரப்போகும் எபிசோடுக்கான புரமோ பல டிவிஸ்ட்டுகள் இருப்பதாக காட்டுகிறது.

குடும்பத்தில் சண்டை

குடும்பத்தில் சண்டை

அதாவது இந்த சீரியலில் ராவியும் ஷிவாவும் எப்போதும் ஒருவருக்கொருவர் சதா சண்டைப்போட்டுக் கொண்டு இருந்தனர்.

இருப்பினும், மகா பூஜை ராவியையும் ஷிவாவையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

இடிபாடுகளில் குடும்பம்

இடிபாடுகளில் குடும்பம்

இருவரும் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுக்கும்போது ஒரு பூகம்பம் ஏற்படுகிறது. இதனால் எல்லாமே கொலாப்ஸாகிறது. குடும்பமே இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கிறது.

காதல் துளிர்விடுகிறது

காதல் துளிர்விடுகிறது

அப்போது அதுவரை எலியும் பூனையுமாக இருந்த ஷிவாவுக்கும் ராவிக்கும் இடையில் காதல் துளிர்விடுகிறது. இடிபாடுகளுக்குள் இருக்கும் ராவியை காப்பாற்றுகிறார் ஷிவா. இருவரும் மன்னிப்பு கேட்டப்படி ஒருவரை ஒருவர் அணைத்து கொள்கின்றனர்.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

ரிஷிதா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தனது மொத்த குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன காண ஆர்வமாய் உள்ளனர். இதனால் #PandyaStores என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: pandian stores serial television
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X