twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பனி விழும் மலர் வனம்… புலிகளைக் காக்கும் படம்..

    By Mayura Akilan
    |

    பனிவிழும் மலர் வனம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் ரஜின் மெலடி மெட்டுக்களைப் போட்டு அசத்தியுள்ளார்.

    படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் ரவி இந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தினைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் விழாவில் கலந்து கொண்ட பலரும் பாராட்டிப் பேசினர்

    இயற்கை எழில் கொஞ்சும் அழகான இடத்தில் படமாக்கப்பட்டுள்ள பனிவிழும் மலர்வனம் திரைப்படம் இயற்கைதான் கதாநாயகன் என்பதை உணர்த்துகிறதாம்.

    கேரளாவின் அழகு

    கேரளாவின் அழகு

    இந்தியாவின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளாவில் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. குமுளி தேக்கடி போன்ற அழகான இடங்களை அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறார்களாம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

    பூச்சி கடிச்சதாமே?

    பூச்சி கடிச்சதாமே?

    காடுகளில் உள்ள அட்டைப்பூச்சிகள், விஷ ஜந்துக்களின் கடிகளையும் பொருத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடித்துள்ளனர் கலைஞர்கள்.

    காதலும் இயற்கையும்

    காதலும் இயற்கையும்

    காதலோடு, இயற்கையைப் பற்றியும், புலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தப் படத்தில் கதையோடு இணைந்து கூறியுள்ளனராம்.

    ஒரு நாயகன் 2 நாயகி

    ஒரு நாயகன் 2 நாயகி

    நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த அபிலாஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் நடித்த சானியா, பேராண்மை படத்தில் நடித்த வர்ஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    நகைச்சுவை நடிகர்

    நகைச்சுவை நடிகர்

    இயக்குநர் ஜெகன் ஜி மற்றும் நகைச்சுவை நடிகர் பாபா லட்சுமணன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    புலி ஒரு கதாபாத்திரம்

    புலி ஒரு கதாபாத்திரம்

    பனி விழும் மலர் வனம் படத்தில் ஒரு புலி நடித்துள்ளது. இது முக்கிய கதாபாத்திரமாக படம் முழுவதும் வருகிறது. இந்தப் புலி, தி ஹேங் ஓவர், பர்னிங் பிரைட், மற்றும் வி பாட் அ ஜு போன்ற படங்களில் நடித்திருக்கிறது.

    இன்கிரிடிபில் இந்தியா

    இன்கிரிடிபில் இந்தியா

    இந்த படம் இயற்கையை நேசிப்பவர்களுக்கு சிறந்த படமாக அமையும். இந்தப் படம் புலிகளைப் பாதுகாப்போம் என்ற வசனத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளதாம்.

    மக்கள் தொடர்பு செல்வரகு

    மக்கள் தொடர்பு செல்வரகு

    இந்த திரைப்படத்திற்கு இசை ரஜின். படத்தின் ஒளிப்பதிவு என்.ராகவ், எடிட்டிங் ரவி சங்கர். ஜேம்ஸ் டேவிட் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் மக்கள் தொடர்பாளர் பணியை எஸ். செல்வரகு செய்து வருகிறார். பனி விழும் மலர்வனம் தலைப்பினைப் போல ரசிகர்களின் நெஞ்சங்களில் குளிர்விக்கும் என்கின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள்

    English summary
    Pani Vizhum Malarvanam as breezy as the title sounds it is an adventurous fantasy love film that is built on a first of it's kind plot 'Nature is heroic', It is shot in some of the exotic locations of Kumuli & Thekady. The team has worked hard in the ups and downs of the mountain and hills to give a quality output, even though they were bit by leaches and other creatures on the course of their journey, sheer hard work and enthusiasm that the team had has given a quality output.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X