twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுதான பிரச்னை, இந்தா நீக்கிட்டோம்... பானிபட் படத்தில் 11 நிமிட காட்சிகள் கட்!

    By
    |

    மும்பை: அர்ஜுன் கபூர் நடித்துள்ள பானிபட் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாகப் படக்குழுத் தெரிவித்துள்ளது.

    மூன்றாம் பானிபட் போரை மையமாக வைத்து பானிபட் என்ற இந்திப் படம் உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அசுதோஷ் கோவரிகர் இயக்கியுள்ளார். இவர் புகழ்பெற்ற லகான், ஜோதா அக்பர், மொகஞ்சதாரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

    Panipat film drops scene showing Maharaja Surajmal asking for Agra fort, says report

    மூன்றாவது பானிபட் போரில் மராட்டியர்களும் ஆப்கான் மன்னர் அகமது ஷா அப்தாலியும் மோதினர். இதில் மராட்டிய படைகள் தோல்வியைத் தழுவின. இப்போரில் சுமார் 40,000 மராட்டிய வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பின் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்தப் போரில் மராட்டிய மன்னர்களுக்கு ராஜபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் உதவவில்லை எனவும் அப்போதைய பரத்பூர் மன்னர் சுரஜ்மல், மராத்தியப் படைகளுக்கு உதவாமல் பின் வாங்கிச் சென்றதாகவும் இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

    திருமணமானதை மறந்து டாப்லெஸாக போஸ் கொடுத்த நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!திருமணமானதை மறந்து டாப்லெஸாக போஸ் கொடுத்த நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!

    இதற்கு ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜாட் சமூகத்தை இந்தப் படம் அவமதித்துவிட்டதாகவும் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். படத்தை தடை செய்ய வேண்டும் என இரண்டு எம்.பி.க்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் 11 நிமிட காட்சியை படக்குழு நீக்கியுள்ளது.

    English summary
    Makers of 'Panipat' have deleted a scene from the Arjun Kapoor film that was being objected to by several Jat groups for the past several days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X