ஒரு பிடி மண்ணை கூட எடுத்துட்டு போக விடமாட்டேன்.. பானிபட் டிரைலர் ரிலீஸ்!

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அசுதோஷ் கவாரிக்கர் இயக்கத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், கீர்த்தி சனோன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பானிபட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Panipat Official Trailer | Sanjay Dutt | Arjun Kapoor | Trailer Reaction

மும்பை: வரலாற்று பாடங்களில் நாம் அனைவரும் பானிபட் போர் குறித்து படித்திருப்போம்.

அந்த பானிபட் போரை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் அசுதோஷ் கவாரிக்கர் அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், கீர்த்தி சனோன் நடிப்பில் பானிபட் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.

தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள அந்த டிரைலர் இந்தியளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர்

பிரம்மாண்ட இயக்குநர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் இயக்குநர் ஷங்கர் உடனே நினைவுக்கு வருவார். அதே போல பாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் இயக்குநர் அசுதோஷ் கவாரிக்கர். ஆமிர்கானை வைத்து அவர் இயக்கிய லகான் திரைப்படம், ஆஸ்கர் இறுதி பரிந்துரை வரை சென்றது குறிப்பிடத்தக்கது. ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் ஜோதா அக்பர் மற்றும் மொஹஞ்சதாரோ உள்ளிட்ட படங்களையும் இயக்கிய அசுதோஷ், தற்போது பானிபட் படத்தை இயக்கியுள்ளார்.

சுதந்திர போராட்ட படங்கள்

சுதந்திர போராட்ட படங்கள்

இந்திய சினிமாவில் தொடர்ந்து சுதந்திர போராட்ட படங்கள் உருவாக தொடங்கி உள்ளன. பிரம்மாண்ட படங்களை உருவாக்க நினைத்தாலே முதலில் சுதந்திர போராட்ட படங்கள் தான் இயக்குநர்களின் தேர்வாக அமைந்து விடுகிறது. பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் எனும் சுதந்திர போராட்ட படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 என அனைத்து பிரம்மாண்ட படங்களும் சுதந்திர போராட்ட படங்களாகவே உருவாகி வருகின்றன.

டிரெண்டிங்

இன்று வெளியாகியுள்ள பானிபட் படத்தின் டிரைலர் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்தியளவில் #PanipatTrailer முதலிடத்தை பிடித்துள்ளது. அசுதோஷ் கவாரிக்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான மொஹஞ்சதாரோ படம் பல விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை அடைந்த நிலையில், இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலர் எப்படி இருக்கு?

1761ம் ஆண்டு மராத்திய ராஜ்யத்திற்கும், ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்த முகலாய ராஜ்யத்திற்கும் எதிராக நடந்த மாபெரும் போர் பானிபட் போராகும்.

இந்த பானிபட் படத்தில், 2 ஸ்டேட்ஸ் படத்தில் நாயகனாக நடித்திருந்த அர்ஜுன் கபூர், மராத்திய மன்னன் சதாசிவ ராவாக நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆப்கான் அரசன் அகமத் ஷா அப்தாலியாக நடித்துள்ளார்.

மூன்றாம் பானிபட் போர் காட்சிகள் தான் இந்த படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் பானிபட் படம் ரிலீசாகிறது.

More from Filmibeat

Read more about: trailer டிரைலர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X