நிவின் பாலிக்கு அம்மாவாக நடித்ததால் கண்டுகொள்ளாத மோகன்லால் - மம்முட்டி.. நடிகை சாந்தி கிருஷ்ணா வேதனை
கொச்சி: தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் இருக்கும் சீனியர் நடிகைகளில் ஒருவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா என்று கூறினால் ரசிகர்கள் பலருக்கும் அவர் குறித்து நன்றாக தெரியும். அப்படியான நடிகை சாந்தி கிருஷ்ணா தனது சமீபத்திய பேட்டியில் தனது மனதில் இருந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அது மலையாள திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த 1980-ல் மலையாளப் படமான சாலினி என்ற கூட்டு காரி மூலம் திரையுலகில் அறிமுகமானார் சாந்தி கிருஷ்ணா. அடுத்த ஆண்டு தமிழில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் சுரேஷுடன் இணைந்து நடித்து தமிழில் நடிகையாக களமிறங்கினார். இந்த படம் இவருக்கு பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா என்ற அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இது மட்டும் இல்லாமல், அவரை திரையுலகின் முன்னணி நடிகையாகவும் மாற்றியது.

நிவின் பாலி: அதாவது அவரது பேட்டியில், நான் இப்போதும் மோகன்லால், மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். காரணம் நான் அவர்கள் வீட்டில் ஒருவராக பார்க்கப்படுகிறேன். ஆனால் நான் நிவின் பாலி, ஃபகத் ஃபாசில் போன்ற இளம் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டதால் மோகன்லால் மற்றும் மம்முட்டி என்னை அவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை என்று பேசியுள்ளார். நடிகை பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா இவ்வாறு கூறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
சலசலப்பு: நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் இப்போதும் நடிகைகள் மீனா, கௌதமியுடன் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்க மிகவும் யோசிக்கிறார்கள் என்பது தொடர்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் மலையாள திரையுலகிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











