யோகிபாபுவின் பன்னிக்குட்டி ட்ரெயிலரை வெளியிட்ட பிரபல நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை: யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிககைர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்துவிடும் போல இவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர் இயக்குநர்கள்.
2009ஆம் ஆண்டு யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் யோகி பாபு. தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தர்பார் படம்
அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. அண்மையில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலை குவித்தது.

பன்னிக்குட்டி படம்
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமீப காலமாக ஹீரோவுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறார். இதேபோல் நடிகர் கருணாகரனும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பன்னிக்குட்டி என்ற படத்தில் நடித்துள்ளனர்.
மாதவன் வெளியிட்டார்
இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகர்கள்
பன்னிக்குட்டி படத்தை அனுசரண் முருகையா இயக்கியுள்ளார். இப்படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











