கத்தாரில் சைமா விருது வழங்கும் விழா - நான்கு மொழி திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு

தோகா: பாண்டலூன்ஸ் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சைமா முதன்முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 15 மற்றும் 16 அன்று இந்த விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழியைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா, முதன்முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது, இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் அன்று இந்த விழா நடைபெறவுள்ளது.

Pantaloons SIIMA to host its 8th Edition in Qatar

பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். ஒன் எஃப்எம் 89.6இல் தோஹாவில் இயங்கும் இந்நிகழ்ச்சி லுசெயில் உள்ளரங்க அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் உள்ளூர் செய்தியாளர்களக்கு விவரங்கள் கூற செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பில், கியூ.என்.டி.சி மஷால் ஷாபிக், விஷ்ணு இந்தூரி, சைமா உரிமையாளர் நவீத் அப்துல்லா, ஒன் எஃப்.எம் கத்தார் தலைமை நிர்வாக அதிகாரி ஜாசிம் முகமது, ஒன் எஃப்.எம் கத்தார் சி.சி.ஓ டாக்டர். ஆர்.சீதாராமன் (தலைமை நிர்வாக அதிகாரி-தோஹா வங்கி), மேதத் கிரேஸ் (டெய்சீர் மோட்டார்ஸ் பொது மேலாளர்), பொது மேலாளர் வாசிம் தாகே ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய நடிகைகள் ஆண்ட்ரியா ஜெரோமியா மற்றும் மன்விதா ஹரிஷ் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் ஸ்பான்சர்களுடன் ஊடகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். திரு.விஷ்ணுவர்தன் இந்தூரி, சைமா 2019இல் கலந்து கொள்ளும் முக்கிய பிரபலங்களையும், விருந்தினர்களின் பட்டியலையும், குறும்பட வெற்றியாளர்களையும், சைமா 2019 இல் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளை பற்றியும் கூறினார்.

நான்கு மொழி திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தெலுங்கு மற்றும் கன்னட நிகழ்ச்சிகளும், ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று தமிழ் மற்றும் மலையாள நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

தற்போது, சைமா அதன் எட்டாவது ஆண்டில், அதிகம் விரும்பி பார்க்கப்படும் விருது நிகழ்ச்சியாகும், இது திறமையையும் சிறப்பையும் அங்கீகரிக்கிறது, அதே நேரத்தில் தென்னிந்திய சினிமாவை உலகளாவிய எல்லைகளில் கொண்டு சென்று தென்னிந்திய நடிகர்களுக்கு சர்வதேச ரசிகர்களையும் ஏற்படுத்தித் தரும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

திரைப்பட விருதுகள் தவிர, தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்களை பாராட்டும் வணிக விருது வழங்கும் விழா, ஆகஸ்ட் 14ஆம் தேதி தோஹாவிலுள்ள சொகுசு ஹோட்டலான மாண்ட்ரியன் (Mondrian Doha) தோஹாவில் நடைபெறும். இந்த கத்தார் விழா முக்கிய நபர்கள் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார பங்களிப்பாளர்களை பாராட்ட நடைபெறுகிறது. பிரபலங்கள் மற்றும் உயர் தொழில் வல்லுநர்களால் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X