பாபநாசம் 2 வருமா? வராதா? திரிஷ்யம் 2 இயக்குநர் ஜித்து ஜோசப் பளீச்!
சென்னை: பாபநாசம் 2 திரைப்படம் உருவாகுமா என்பது குறித்து இயக்குநர் ஜித்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
மோகன் லால், மீனா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
திரிஷ்யம் படம் தமிழ் தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வசூலை குவித்தது.

நெகட்டிவ் விமர்சனங்கள்
இதில் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி லீடிங் ரோலில் நடித்திருந்தனர். பாபநாசம் என்ற பெயரில் இப்படம் வெளியானது. இதில் கவுதமியின் நடிப்புக்கு சற்று நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்த போதும் கமலின் நடிப்பை பாராட்டி தள்ளினர்.

நல்ல வரவேற்பு
இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக திரிஷ்யம் 2 படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதில் மோகன் லால், மீனா, அன்சிபா, எஸ்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கமல் நடிப்பாரா?
ஜித்து ஜோசப்பின் ஸ்க்ரீன்பிளேவையும், மோகன் லாலின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படமும் தமிழில் ரீமேக் ஆகுமா? அரசியலில் பிஸியாக உள்ள கமல் இந்தப் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

நான் ரெடி..
இந்நிலையில் இயக்குநர் ஜித்து ஜோசப் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். "கமல் அனுமதி கிடைத்தால் பாபநாசம் 2 படத்தை இயக்க தான் தயாராக இருக்கிறேன். கமலின் முடிவை பொறுத்தே 'பாபநாசம் 2' படம் உருவாகுமா? இல்லையா? என்பதை சொல்ல முடியும்" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











