ஒரே டேக்கில் வசனம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் மற்றொரு கமல் வெறியன் !

சென்னை : பாபநாசம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி வசனத்தை ஒரே டேக்கில் பேசி ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளார் கமலின் ரசிகர் ஒருவர்.

சில நாட்களுக்கு முன்பு த்ரெட்மில்லில் அண்ணாத்த ஆடுறார் என்ற கமல் பாடலுக்கு நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வின் .

பலர் த்ரெட்மில்லில் நடனம் ஆடினாலும் கமல் பாடல் என்றவுடன் நல்ல வரவேற்பு மக்களிடையே கிடைத்தது. இவரது நடனத்தை பார்த்த கமலும் வாழ்த்துக்கள் கூறி பதில் அளித்தார்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

டிக் டாக் போன்ற பல செயலிகள் மூலம் தன்னுள் இருக்கும் திறமைகளை பலர் வெளிக்கொண்டு வருகின்றனர். ஆனால் அனைவரும் அதில் வெற்றி கொள்வதில்லை, தன்னை அர்ப்பணித்து, பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை .

கமல் வெறியர்

கமல் வெறியர்

எப்போதும் திரை துறையில் மட்டும் அல்லாமல் பல துறைகளில் தனது திறமைகளையும்,புது முயற்சிகளை செய்து வரும் கமல் ஹாசனையே பலரும் பின்பற்றிவருகின்றனர் அவரது ரசிகர்கள் .புது முயற்சி என்றாலே கமல் என்று தெரிந்த ரசிகர்கள் ,அவர்களது புது முயற்சிகளையும் கமலை வைத்தே துவங்குகின்றனர்.

எல்லாம் சாத்தியம்

எல்லாம் சாத்தியம்

கமல் ரசிகர்கள் புது முயற்சிகளை தங்களால் செய்து முடிக்க முடியும் என்ற வெறியோடு பல புது முயற்சிகளை செய்து வருகின்றனர் . அந்த வகையில் அஸ்வினை தொடர்ந்து , ராகுல் கண்ணன் என்பவர் கமல் படமான பாபநாசத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாக பரவி வருகின்றது.

மகள் செண்டிமெண்ட்

மகள் செண்டிமெண்ட்

பாபநாசத்தில் அன்புள்ள தந்தையாக எதார்தமாகவே நடித்து இருப்பார் கமல். இந்த படத்தின் கதை முக்கியத்துவத்தை அறிந்து பல மொழிகளில் இப்படம் வெளிவந்து வெற்றி வாகை சூடியது. அப்படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் ரசிகர்களை, அடுத்து என்ன என்று கேட்கும் அளவிற்கு சுவாரஸ்யமாகவே இருக்கும்,அது தான் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம் .

பாபநாசம்

பாபநாசம்

பாபநாசம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை யாராலும் மறக்கவே முடியாது . அந்த உருக்கமான காட்சியை மிக இயல்பாகவும் , எதார்தமாகவும் ஒரே டேக்கில் எடுத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார் ராகுல் கண்ணன் . கமல் ரசிகர்களால் எல்லாம் முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார் கமல் ரசிகர். ஊரடங்கு சமயத்தில் வெட்டியாக பொழுதைக்கழிக்காமல் பொழுது போக்காகவும், அழகாகவும் , பயனுள்ளதாகவும் நேரம் கழிக்கும் இவர்களுக்கு பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர். பலரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X