லாக்டவுன் லாக்.. கமலின் பாபநாசம், விஜய்யின் பைரவா பட நடிகர் திருமணம்.. மம்மூட்டி உறவினரை மணந்தார்!

By

சென்னை: பாபநாசம், பைரவா பட நடிகர், மம்மூட்டியின் உறவு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

மோகன்லால், மீனா, ஆஷா சரத், சித்திக், அன்ஷிபா ஹாசன் உட்பட பலர் நடித்த மலையாள படம், த்ரிஷ்யம்.

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் படம், கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது.

தமிழ் ரீமேக் பாபநாசம்

தமிழ் ரீமேக் பாபநாசம்

இதை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தவர் ரோஷன் பஷீர். இதையடுத்து த்ரிஷயம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். இதையும் ஜீத்து ஜோசப்பே இயக்கி இருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.

விஜய்யின் பைரவா

விஜய்யின் பைரவா

இந்தப் படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் ரோஷன் பஷீரே நடித்திருந்தார். தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். இதையடுத்து விஜய் நடித்த பைரவா படத்திலும் முக்கிய கேரக்டரில் ரோஷன் நடித்திருந்தார். மலையாளத்தில் பிளஸ் டூ, ரெட் ஒயின், டூரிஸ்ட் ஹோம் உள்பட பல படங்களில் நடித்துள்ள ரோஷன் பஷீர், தமிழில் அடுத்து மூன்று ரசிகர்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த பர்ஸானாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. ஃபர்ஸானா, பிரபல நடிகர் மம்மூட்டியின் உறவினர். சட்டம் படித்துள்ளார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 5 ஆம் தேதி கேரளாவில் நடந்தது. இதில் இரு வீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

எளிமையாக திருமணம்

எளிமையாக திருமணம்

இந்நிலையில், இவர்கள் திருமணம் எளிமையாக நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் ரோஷன் பஷீர் இன்று வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X