அந்த பாப்பா நடிகையா இது?நம்பவே முடியலையே? வைரலாகும் பிரபல குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படங்கள்!
சென்னை: பிரபல குழந்தை நட்சத்திரம், சேலை கட்டி வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகள் இந்தப் படம் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது.

நடிகை எஸ்தர் அனில்
சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. இந்தப் படத்தில் மோகன்லால் மகள்களாக நடித்திருந்தவர்களில் ஒருவர், எஸ்தர் அனில். த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதிலும் கமல்ஹாசன், கவுதமி தம்பதியின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அனில்தான். மீனு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார்.

வளர்ந்து விட்டார்
இப்போது இந்த மீனு குட்டி வளர்ந்துவிட்டார். இன்னும் அவர் குழந்தை நட்சத்திரம் இல்லை. 18 வயது ஆகிவிட்டதாம், அவருக்கு. இதையடுத்து இப்போது சிறப்பு போட்டோஷூட் நடத்தியுள்ளார், எஸ்தர் அனில். சேலை கட்டியபடி அவர் எடுத்துள்ள அந்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பார்ட் பார்ட்டாக வெளியிட்டு வருகிறார். இந்த போட்டோஸ், வைரலாகி வருகின்றன.

அழகான டைட்டில்
ஒரு புகைப்படத்துக்கு கேப்ஷனாக, 'அழகான டைட்டில் வைக்கலாம்னு நினைச்சா, யோசிக்கவே முடியலை' என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள், எதற்கு அழகான கேப்ஷன்? போட்டோ அழகா இருக்கே, அது போதும் என்று கூறியுள்ளனர். இன்னும் பலர் விரைவில் ஹீரோயினாக நடிக்க அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் அவர் அழகை புகழ்ந்துள்ளனர்.

நம்பவே முடியலையே?
ஒருவர், சிறப்பான கேப்ஷனை தேடுங்க.. ஆனா, அது உங்களை விட அழகாக இருக்கப் போறதில்லை என்று கூறியிருக்கிறார். த்ரிஷ்யம் 2 படத்துல இருக்கறீங்களா? என்று ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார். ஆஹா, அந்த பாப்பா நடிகையா இது? நம்பவே முடியலையே? என்று ஒருவர் கூறியிருக்கிறார். எஸ்தர் அனிலின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











