twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்

    |

    சென்னை: "பேப்பர் பாய்" படத்தின் பட பிடிப்புக்கான பூஜை இன்று போடப்பட்டது. கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீதர் கோவிந்தராஜ் இப்படத்தை இயக்க உள்ளார்.

    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பேப்பர் பாய் படத்தின் ரீமேக் தான் இந்த பேப்பர் பாய் படம். இப்படத்தை தமிழக்கு ஏற்றவாறு சிறு மாற்றங்களை செய்து உருவாக்கி உள்ளதாக இயக்குனர் ஸ்ரீதர் கோவிந்தராஜ் கூறினார்.

     Paper Boy Shooting is just beginning

    தினமும் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனும், கோடீஸ்வர வீட்டு பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதல் தான் ''பேப்பர் பாய்" படத்தின் கதை கரு. இந்த காதலால் இவர்கள் இருவர் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தி சொல்லி இருக்கிறோம். காதல் கதை என்பதால் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை போன்ற படங்களின் வரிசையில் இந்தப்படம் நிச்சயம் இருக்கும் என்று இயக்குநர் ஸ்ரீதர் கோவிந்தார் கூறினார்.

     Paper Boy Shooting is just beginning

    இப்படத்தின் கதாநாயகனாக சுவாதிஷ் ராஜாவும், நாயகியாக யாமினி பாஸ்கரரும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய்,சுஜாதா கடலோரக் கவிதைகள் ரேகா, ராட்சசன் வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், தாரை தப்பட்டை அக்ஷயா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கோலி சோடா, சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

     Paper Boy Shooting is just beginning

    பேப்பர் பாய் படத்தின், படப்பிடிப்பிற்கான பூஜை சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது. கேரளா மற்றும் கர்நாடகாவில் சூட்டிங் நடைபெற உள்ளதாக இயக்குனர் தெரிவித்தார். கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீதர் கோவிந்தராஜ் இப்படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

     Paper Boy Shooting is just beginning

    English summary
    Paper Boy Shooting is just beginning from today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X