பப்பரப்பாம்.... ஒரு சமூக சேவையோடு அறிமுகமாகும் புதியவர்களின் படம்!

By Shankar

இயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளரும், 'உறுமி' படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ள புதிய படம் ''பப்பரப்பாம்''.

'நான் மகான் அல்ல', 'யாழ்' படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சதுரங்க வேட்டை இஷாரா, யாமினி, ராஜா, கதிர்கமல், நாய்கள் ஜாக்கிரதை ஜெனிஷ், சூப்பர் சிங்கர் புகழ் அழகேசன் உட்பட இப்படத்தில் நடித்துள்ளனர்.

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா

படத்தை வித்தியாசமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் படக்குழுவினர் கிட்டத்தட்ட நூறுபேர் கலந்து கொண்டு பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம் அருகேயுள்ள சாலைகளைச் முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

ஏன் இந்த வேலை?

ஏன் இந்த வேலை?

''இப்படி சுத்தம் செய்து தங்கள் படத்தை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறோம். இது இத்தோடு நிற்காமல் படம் வெளியாகும் வரை இதே குழுவோடு வேறு வேறு இடங்களில் எங்கள் பணியைத் தொடர்வோம்," என்கிறார் சசிகுமாரன்.

காலை ஆறு மணி முதல் மாலை வரை

காலை ஆறு மணி முதல் மாலை வரை

நாங்களும் சுத்தம் செய்கிறோம் என்கிற மாதிரி போஸ் கொடுத்துவிட்டு ஓடிவிடாமல் அடிக்கிற வெய்யிலில் காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த சுத்தம் செய்யும் பணி மாலை ஆறுமணி வரை குழுவினர் யாரும் கலையாமல் சுத்தம் செய்ததை பார்த்த அந்த ஏரியா மக்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர்.

புதிய குப்பைத் தொட்டிகள்

புதிய குப்பைத் தொட்டிகள்

அந்த சாலையே அரசியல்வாதிகள் கூட்டம்போடும் நாளில் சாலை எப்படி பளிச்சென்று இருக்குமோ அவ்வளவு சுத்தமாக இருந்தது. சுத்தம் செய்ததோடு நிற்காமல் ஐம்பது குப்பைத் தொட்டிகளை அந்த சாலையெங்கும் நிரந்தரமாக வைத்தனர் பப்பரப்பாம் படக்குழுவினர்.

இதுதான் கதை

இதுதான் கதை

மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப் பற்றிய ஒரு கதை பப்பரப்பாம். படத்துக்கு ஒளிப்பதிவு சண்முகசுந்தரம், இசை கே எஸ் ரோஸ், எடிட்டிங் கே எம் ரியாஸ், மக்கள் தொடர்பு ஏ. ஜான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X