" பற " என்பது விடுதலையின் குறியீடு… இயக்குனர் கீரா விளக்கம்
சென்னை: பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல, பற என்பது விடுதலையின் குறியீடு என்று இயக்குனர் கீரா விளக்கம் அளித்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் கதையை மொத்தமாக ஒரே புள்ளியில் இணைப்பது தான் பற படத்தின் சுவாரசியம் என்று இயக்குனர் கூறினார்.

சமூக அக்கறை உள்ள படங்கள் அண்மைக்காலங்களில் அதிக அளவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற படங்களுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது. அதே போன்று சாதி, மதம், அடக்குமுறைகளை கேள்வி கேட்கும் படமாக பற படம் தயாராகி வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது, இதில் உன்பேரை எழுதி வைச்சேன் என்ற பாடல் ட்ரெண்டாகி இதுவரை 15 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து, அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக மாறிவருகிறது.
இப்படம் பற்றி இயக்குநர் கீரா படத்தைப்பற்றி சிலவற்றை நம்மிடம் கூறினார். "நம் சமூகத்தில் ஆணவக்கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில் பற படம் வெளிவருவது மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆணவக்கொலையை எதிர்க்கும் படமாக இப்படம்இருக்கும். இங்கு ஒடுக்குமுறை என்பதை சாதிய ஒடுக்குமுறையாக மட்டுமே சிலர் பார்க்கிறார்கள்.அது அப்படியல்ல. மத ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கு ஒடுக்குமுறைகள் நிறைய இருக்கின்றன.

இப்படத்தின் டைட்டிலை வைத்து சிலர் பற என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல, பற என்றால் பறத்தல், அது விடுதலையின் குறியீடு என்று இயக்குனர் கீரா விளக்கம் அளித்தார். மேலும்,

ஒரே இரவில் நடக்கும் கதையை மொத்தமாக ஒரே புள்ளியில், இணைவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும்ஒரு விடியலைத் தேடுவார்கள் இந்த விடியல் கிடைக்கின்றதா என்பதுதான் கதை. ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பு, ஆச்சரியம் இருக்கும் இப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று இயக்குனர் கீரா தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications











