பிரபலங்கள் வெளியிட்ட ‘பாரடாக்ஸ்‘ குறும்பட டிரைலர்.. கதையின் நாயகியாக மிஷா கோஷல்!
சென்னை: திரையுலக பிரபலங்கள் சேரன், சசிகுமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன் ஆகியோர் 'பேரடாக்ஸ்' (Paradox) குறும்படத்தின் டிரெய்ரை வெளியிட்டுள்ளனர். தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் தயாரிப்பில், பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடித்திருக்கும் உளவியல் அடிப்படையில் உருவாகி உள்ளது 'பேரடாக்ஸ்'
பிரியா கார்த்திகேயன் இயக்கி உள்ள இந்த குறும்படத்திற்கு 'பேரடாக்ஸ்' (Paradox) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முரண்பாடு என்று தமிழில் பொருள்படும் இந்த தலைப்பு மனித உளவியல் சார்ந்த கதைக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. இதில், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'பேரடாக்ஸ்' குறும்படத்தின் டிரெய்லரை திரையுலக பிரபலங்களான இயக்குநரும் மற்றும் நடிகருமான சேரன், சசிகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். குறும்படத்தின் முன்னோட்டத்தை பார்த்து பாராட்டியதோடு இயக்குநர் பிரியா கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த குறும்படத்திற்காக இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரடாக்ஸ்: 25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து, அவன் வாழ்க்கையில் என்ன நடக்கிற என்பதை 'பேரடாக்ஸ்' பார்வையாளர்களுக்கு விளக்குறிது என்றார். 'பேரடாக்ஸ்' குறும்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, ஃபைசல் வி காலித் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ஹரிபிரகாஷ் மேற்கொண்டுள்ளார். ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக் கலவையை எஸ் சிவகுமார் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியனும், கலரிங்கை குபேந்திரனும், டிஐ பணிகளை இன்பினிட்டி மீடியாவும் செய்துள்ளனர்.
மிஷா கோஷல்: இந்த குறும்படத்தில் சேரன் இயக்கிய பொக்கிஷம் திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக அறிமுகமான மிஷா கோஷல் நடித்துள்ளார். இவர் நான் மகான் அல்ல, 180, 7ம் அறிவு, முகமூடி, ராஜா ராணி, வணக்கம் சென்னை, வடகறி, விசாரணை, குற்றம் 23, மெர்சல், லத்தி, ரத்தம் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் இது.


Click it and Unblock the Notifications











