twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரமபதம் விளையாட்டு.. சூப்பர் டைட்டில்.. இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ் !

    |

    சென்னை : பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டு என பாக்யராஜ் கூறினார்.

    24 ஹவர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் 'பரமபதம் விளையாட்டு' படத்தின் ப்ரி- ப்ரொமோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-

     பாடலாசிரியர் தரண் பேசியதாவது,

    பாடலாசிரியர் தரண் பேசியதாவது,

    இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜாலியான பாடல். முதன்முறையாக அம்ரீஷ்-க்கு எழுதுகிறேன். வித்தியாசமாக எழுத வேண்டும் என்று அப்பாடலைப் பற்றி விளக்கம் கேட்டேன். ‘ஓ கலா' என்று தொடங்கும்படி பாடலை இயற்றினேன். ஆனால், இப்பாடல் பதிவு முடிந்து கேட்டபோது, தரம்குறைந்த பாடல் என்ற பெயர் பெற்றுவிடும் என்று அதிர்ச்சியடைந்தேன். இயக்குநரிடமும், இசையமைப்பாளரிடமும் தெரிவித்தபோது, அவர்களும் அதைப்புரிந்து கொண்டு மறுமுறை படப்பிடிப்பு செய்தார்கள் என்றார்.

     சிறுமி மானஸ்வி பேசும்போது,

    சிறுமி மானஸ்வி பேசும்போது,

    இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறேன். காது கேட்காத வாய் பேசமுடியாத குழந்தையாக நடித்திருக்கிறேன். திரிஷா எனக்கு பல உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார். ஒருமுறை எனக்கு குளிரெடுத்தது. அப்போது திரிஷா தனது போர்வைக் கொடுத்தார் என்றார்.

     இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது

    இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது

    என்னுடைய 8-வது படம் திரிஷாவின் 60-வது படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. திருஞானம் என்னிடம் பேசும்போது, இப்படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறது. ‘மொட்ட ஷிவா கெட்ட ஷிவா' படத்தில் வந்த ‘ஹர ஹர மஹாதேவ' பாடல் போல வர வேண்டும் என்று கேட்டார். அதுபோல இதில் ஒரு பாடல் ஹிட் அடித்திருக்கிறது.

     இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும்போது

    இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும்போது

    15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை இயக்குநர் திருஞானம் அழைத்திருந்தார். படம் பார்க்கும் போது 20 படங்கள் இயக்கிய அனுபவம் தெரிந்தது. அவரிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. புது முகம் விஜய்வர்மாவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

    தான் நடிக்கும் படத்தின் விளம்பரத்திற்கு ஏன் நடிகர், நடிகைகள் வரமால் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய நாயகர்கள் ரஜினிகாந்த், விஜய், கமலஹாசன் போன்றோர்களே தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது இவர்கள் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், உங்களைப் போன்றோர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து விடுவோமே என்றார்.

     டி.ஷிவா பேசும்போது,

    டி.ஷிவா பேசும்போது,

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

    இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

     இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

    இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

    இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு'அருமையான தலைப்பு. இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை என்றார்.

    English summary
    Director K Baghyaraja has praised the team Paramapadham Vilayattu movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X