Ajith: கதைத்திருட்டு விவகாரத்தில் சிக்கிய விடாமுயற்சி.. ரூ. 150 கோடி தண்டச் செலவு.. யாருமேல தப்பு?

சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்கி வருகிறார். படத்தில் திரிஷா அர்ஜுன் ரெஜினா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்து வந்தது.

படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என பட குழு கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் கதை தொடர்பாக சிக்கலில் ஒட்டுமொத்த பட குழுவும் மாட்டிக் கொண்டது என்று தான் கூற வேண்டும். அது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

paramount productions vidaamuyarchi lyca ajithkumar

வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்கும் வழக்கத்தை கொண்ட நடிகர்களில் அஜித் குமாரும் ஒருவர். கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இவரது நடிப்பில் துணிவு படம் வெளியானது. அதன் பின்னர் இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாகிறது என்ற தகவல் மட்டும் வெளியானது. ஆனால் படம் குறித்து கடந்த சில மாதங்கள் முன் வரை எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இப்படியான நிலையில் கடந்த வாரத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசரை பார்த்த ரசிகர்கள் டீசரை இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

paramount productions vidaamuyarchi lyca ajithkumar

விடாமுயற்சி படம் குறித்து ஏற்கனவே சினிமா உலகிலும் இணையத்திலும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. குறிப்பாக விடாமுயற்சி படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் என்ற படத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் என தகவல்கள் வெளியாகி இருந்தது. படத்தின் டீசரை பார்த்தபோது இது பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்பதை உறுதி செய்யும் வகையிலும் இருந்தது. ஆனால் இங்கு தான் பிரச்சனையே தொடங்கியுள்ளது.

paramount productions vidaamuyarchi lyca ajithkumar

பிரேக் டவுன்: லைக்கா நிறுவனம் ஏற்கனவே அஜித் குமாரின் கால்ஷீட் வாங்கி விட்டதால் அதனை வீணடிக்க வேண்டாம் என மகிழ்திருமணியை வைத்து பிரேக் டவுன் படத்தை தமிழில் ரீமேக் செய்து கொள்ளலாம் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்பான அதிகாரப்பூர்வ ரீமேக் ஒப்புதலை பிரேக் டவுன் பட குழுவிடமிருந்து பெரும் பணிகளை லைக்கா பார்த்துக் கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

paramount productions vidaamuyarchi lyca ajithkumar

சிக்கல்: தற்போது விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியான பின்னர் அது தொடர்பாக தகவல்கள் செய்திகள் பிரபல ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இதனை கவனித்த பிரேக் டவுன் பட குழு இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி விடாமுயற்சி படம் பிரேக் டவுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் என்பதை தெரிந்து கொண்டது. இதனால் தங்களிடம் ஒப்புதல் பெறாமல் பிரேக் டவுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ததால் லைக்கா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூபாய் 150 கோடி செலுத்த வேண்டும் என லீகல் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

paramount productions vidaamuyarchi lyca ajithkumar

பிஸ்மி: இது தொடர்பாக வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், லைக்கா நிறுவனம் பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமென்ட் நிறுவனத்திடம் பேசி அதிகாரப்பூர்வ ஒப்புதலை பெற்று தருவதாக முன்னரே கூறியதாகவும் ஆனால் அது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் இப்போது இந்த சிக்கல் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகுமான ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் அச்சம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X