Director Ram: கற்றது தமிழ் முதல் பறந்து போ வரை.. பேரன்புக்காரன் ராம் ஒரு குட்டி ரீவைண்ட்!

சென்னை: இயக்குநர் இயக்கத்தில் உருவாகி வரும் ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் பறந்து போ. இந்த படத்தின் புரோமோசன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் மெச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் புரோமோசன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ராம் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதை, குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் Cine Phill என்ற பெயரில் உள்ள தீவிர ரசிகர் ஒருவர் மிகவும் வர்ணித்து பகிர்ந்துள்ளார். அவரது பதிவு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் ராம் படம்னா ஒரு தனித்துவம் இருக்கும். நம்ம மனசுக்குள்ளயே ஒரு பயணம் போன மாதிரி அதுதான் ராம் மேஜிக் அவர் சொல்ற மாதிரி, "படங்கள் வெறும் பொழுது போக்கு அல்ல, அது ஒரு தத்துவம். கற்றது தமிழ் - ஒரு தமிழ் இளைஞனோட கோபம், தனிமை, அடையாளத் தேடல் இது தான் ராம் சினிமா உலகத்துக்குள்ள நம்மள கூட்டிட்டு வந்த முதல் படி. சுமதி, பிரபாகரன்னு அந்த கதாபாத்திரங்கள், நம்ம மனசுல இன்னும் அழியாம நிக்கும். 'பைத்தியக்காரனாக நான்'னு அவன் கேட்கிற கேள்வி, காலம் கடந்தும் ஒலிக்கும்.

Parandhu Po Director Ram Movies And Its Theory Explanations cinema life from Kattradhu Thamizh
Photo Credit:

தங்க மீன்கள் & தரமணி: ஒரு அப்பா-பொண்ணு உறவு, கல்வி முறை பற்றிய கேள்வி, அன்புக்கு ஏழ்மை இல்லைனு சொல்ற கதை. 'செல்லம்மா'வும், அவளோட அப்பாவும் பேசிக்காத அன்பு, நம்ம கண்கலங்க வெச்சது. ராம் படத்துல "சமரசமற்ற கலை"யை பாசத்தையும், வலியையும் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார். தரமணி - நவீன கால உறவுகள், சென்னை மாநகரத்தின் யதார்த்தம், ஒரு பெண்ணின் சுதந்திரம் இதெல்லாம் பேசின படம். ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம், சமூகத்தின் இரட்டை வேடத்தை எவ்வளவு வெளிப்படையா காட்டியிருக்கும் ! "சமூகத்தின் உண்மைகளை பிரதிபலிக்கும் கண்ணாடி" தான் அவர் சினிமா.

பேரன்பு: அப்பா- மகள் பாசம் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையோட உலகம், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு இதையெல்லாம் ராம் சார் காட்டிய விதமே அற்புதம். மம்மூட்டி சாரோட நடிப்பு, படத்தோட அமைதி. கலையும் இலக்கியமும் சேரும் இடம்" பேரன்பு ஒரு பெரும் கவிதை. மனசுக்குள்ள அப்படியே இறங்கிடும்.

Parandhu Po Director Ram Movies And Its Theory Explanations cinema life from Kattradhu Thamizh
Photo Credit:

யுவன் - நா. முத்துக்குமார்: ராம் படங்கள்ல இசைக்குன்னு ஒரு தனி உயிர் உண்டு. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தோட உணர்வுகளை அப்படியே நமக்குள்ள கடத்தும். அதுக்கு உயிர் கொடுக்கும் நா.முத்துக்குமார் போன்ற கவிஞர்களின் பாடல் வரிகள்! ஒவ்வொரு இசையும் படத்தோட வலியையும், அன்பையும், ஏக்கத்தையும் அப்படியே நம்ம மனசுல பதிய வைக்கும். வசனங்கள் பேசாததை, இசை ஒரு பெரிய மௌனமா நமக்குள்ள பேசும். ராம் படங்களின் ஆழத்துக்கு இசையும், கவித்துவமான பாடல் வரிகளும் ஒரு முக்கிய காரணம்.

பறந்து போ: இப்படிப்பட்ட ஆழமான கலைப் படைப்புகளைத் தந்த டைரக்டர் ராம். தன் அடுத்த படமான பறந்து போ, இன்னும் ஒரு ஆழமான விஷயத்தை நமக்கு உணர்த்தும் ! ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. ராம் சார் படங்கள் எப்பவும் பேசப்படும். ஏன்னா, அவர் மனுஷ மனசையும், வாழ்க்கையோட உண்மைகளையும் அப்படியே காட்டுவார். அவர் கலைப் பயணம் தொடரட்டும், இன்னும் நிறைய நல்ல படங்கள் தரட்டும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X