Ram: விட்டா விடு... இல்லையினா உனக்குதான் கேன்சர் வரும்.. இப்படி இயக்குநர் ராமை மிரட்டியது யார்?

சென்னை: இயக்குநர் ராம், தமிழ் சினிமாவில் தனக்கென தனி திரைமொழியையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளவர். இவரது படங்கள் என்றாலே இருக்கமான கிளைமாக்ஸ், அல்லது திரைக்கதை என ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை இயக்கிக் கொண்டு இருந்த ராம், கலகலப்பான முழுக்க முழுக்க நகைச்சுவையான யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றாக பறந்து போ படம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. படத்தில் இயக்குநர் ராம் காட்சிப் படுத்தியுள்ள பல காட்சிகள், குழந்தைகளின் பார்வையில் இருந்து காட்சிப் படுத்தியது தான் படத்தை பலரும் கொண்டாட காரணம். I Din't Rise, கங்குலி போஸாடா கொடுக்கிற, நான் அஞ்சாவது படிக்கும்போது கேட்ட சூரியகாந்தி பூவை, ஒருவழியா என் பையன் அஞ்சாவது படிக்கும் போது கொண்டு வந்து கொடுத்துட்ட, ALL அப்பாஸ் are Liars, நீ சிகரெட்டை விட்டா விடு இல்லையினா கேன்சர் வந்து சாவு" போன்ற வசனங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்களையும் சிரிப்புகளையும் அள்ளியது.

Paranthu Po Director Ram Opens About How His Push to Him For Quit Cigarette at Neeya Naana
Photo Credit:

பறந்து போ: 8 வயது குழந்தை - அப்பா, 8 வயது குழந்தை - அம்மா, 8 வயது குழந்தை - உலகம் என, ராமின் திரைமொழி மொத்தமும் பிரமாதமான ஒன்றுதான். படத்தில் அப்பாவாக நடித்துள்ள சிவாவைப் பார்த்து அவரது மகன் அன்பு கூறும் மிகவும் முக்கியமான விஷயம், அப்பா நீ சிகரெட் பிடிக்காத அப்பா. சிகரெட் பிடிச்சா கேன்சர் வருமாம் அப்பா, தயவு செய்து சிகரெட் பிடிக்காத அப்பா, சத்தியம் பண்ணு சிக்ரெட் பிடிக்க மாட்டேன் என" என அன்பு கதாபாத்திரம் தனது அப்பாவை சிக்ரெட் பழக்கத்தில் இருந்து மீட்க எடுக்கும் முயற்சிகள் ரசனை. ஒருகட்டத்தில் அன்பு, தனது அப்பாவை நோக்கி, அப்பா நீ சிகரெட்டை விட்டா விடு இல்லையினா கேன்சர் வந்து சாவு எனக்கு என்ன எனக் கூறும் காட்சிக்கு மொத்த திரையரங்கும் அப்லாஸால் நிறைந்தது.

விட்டா விடு: இந்த காட்சியை தான் படத்தில் வைத்தது தொடர்பாக விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நியா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ராம் கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, " எனது மகன் என்னை சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று கூறிக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் என்னைப் பார்க்க வருபர்களிடம் ' அவர்ட்ட சொல்லுங்க சிகரெட் பிடிச்சா கேன்சர் வருமாமா என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டான். ஒரு கட்டத்தில் நான் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் போது, நீ சிகரெட்டை விட்டா விடு இல்லையினா எனக்கென்ன எனக் கூறினான்.

Paranthu Po Director Ram Opens About How His Push to Him For Quit Cigarette at Neeya Naana
Photo Credit:

ஒருநாள் இரவு: சிகரெட்டை விடச்சொல்லி பலரும் சொல்லி உள்ளார்கள். ஆனால் எனது மகன் சொன்னது ஒரு மாதிரியாக இருந்தது மேலும் எனக்குள்ளும் இதை விட்டால் என்ன என்ற ஏற்பட்டு, ஒரு நாள் இரவில் விட்டதுதான் அந்த சிகரெட் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: vijay tv ram shiva neeya naana
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X