Paranthu Po Public Review: 5,6 முறை அழுதோம்.. 50,60 முறை சிரித்தோம்.. இதைவிட நல்ல படம் கொடுக்க முடியாது

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் மெச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரயான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இன்று அதாவது ஜூலை 4 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் பறந்து போ. இந்த படத்தை Jio Hotstar, GKS Bros Production, Seven Seas And Seven Hills Productions இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் குறித்து ரசிகர்கள் என்ன கூறினார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகை ஒருவர் கூறுகையில், " டூரிஸ்ட் ஃபேமிலி படம் போல் இருந்தால் தான் தியேட்டருக்கு வர வேண்டும் என இருந்தேன். அந்த வகையில் பறந்து போ படம் தரமான ஃபீல் குட் மூவி. சிவாவின் காமெடிக்கு சிரித்துக் கொண்டே இருந்தேன். அன்பு கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் சிறப்பாக நடித்திருந்தான். சில நேரங்களில் அழ வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அந்த சிறுவன். ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி" எனத் தெரிவித்துள்ளார்.

Paranthu Po Public Review Fans Appreciates Ram Merchi Shiva and Whole Team For Feelgood movie
Photo Credit:

அதேபோல் ரசிகர் ஒருவர் படம் குறித்து பேசுகையில், " தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததே இல்லை. தமிழ் சினிமாவில் பிரமாண்டமான வெற்றியைக் குவிக்கப்போகிறது. இதைவிட பெஸ்ட் சினிமா இருக்கவே முடியாது. 5,6 முறை அழவைத்தது படம், ஒரு 50,60 முறை பயங்கரமாக சிரிக்க வைத்தது. இந்த படம் பயங்கரமான பெஞ்ச் மார்க்காக தமிழ் சினிமாவுக்கு இருக்கும். படம் பார்க்கும் அனைவரும் சிரிக்கவும் செய்வார்கள், அழவும் செய்வார்கள். இந்த படம் இயக்குநர் ராமிற்கு பயங்கரமான ரீச் கொடுக்கப்போகிறது" என படம் குறித்து தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார்.

19 பாடல்கள்: மற்றொருவர் கூறுகையில், " வழக்கமாகவே ராம் படங்களை பார்த்துவிட்டு இறுக்கமான மனநிலையில் தான் வெளியே வருவோம். ஆனால் இந்த படத்தில் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிவா இல்லை என்றால் இந்த படம் இல்லை. சிவாவுக்காக இந்த படம் எழுதப்பட்டது போல இருந்தது. 19 பாடல்களும் படத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. எல்லாருடைய பார்வையில் இருந்தும் படம் பேசுகிறது. இயக்குநர் ராமிற்கு நன்றிகள்" எனத் தெரிவித்தார்.

Paranthu Po Public Review Fans Appreciates Ram Merchi Shiva and Whole Team For Feelgood movie
Photo Credit:

ஆபாச காமெடி இல்லாத நகைச்சுவைப் படம்: இன்னொரு ரசிகை கூறும்போது, " படமே புதுசாக உள்ளது. மொத்த படமும் திருப்தியான அனுபவத்தைக் கொடுக்கிறது. ராமின் எல்லா படங்களும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த படம் ரொம்பவும் வித்தியாசமாகவும் புதுசாகவும் உள்ளது. படத்தில் ஒரு ஆபாச காமெடி கூட இல்லை. குடும்பமாக இந்த படத்தை பார்க்கலாம். கிரேஸ் ஆண்டனி சிறப்பாக நடித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

Paranthu Po Public Review Fans Appreciates Ram Merchi Shiva and Whole Team For Feelgood movie
Photo Credit:

ராம்க்கு நன்றி: இன்னொரு ரசிகர் கூறும்போது, " இப்படி ஒரு படத்தைக் கொடுத்த ராம் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். வேறு ஒரு எண்ணத்தோடுதான் படம் பார்க்க வந்தேன். ஆனால் ராம் மொத்தமாக வேறு ஒரு படத்தைக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் மூலம் எல்லா விதமான படங்களும் இயக்குநர் ராமினால் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். நகைச்சுவையாகவும், ஒரு குடும்பத்திற்கு ஏற்ற படத்தைக் கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X