எவ்வளவு நாள்தான் காத்திருக்கிறது? இந்த வருஷம் கல்யாணம்தான்... பிரபல ஹீரோயின் அதிரடி முடிவு
சென்னை: நடிகை ஆகன்ஷா புரி, தனது காதலரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் நடிப்பில் வெளியான அலெக்ஸ்பாண்டியன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆகன்ஷா புரி.
இதில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். சுராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், 2013 ஆம் ஆண்டு வெளியானது.

பிரைஸ் த லார்ட்
இதையடுத்து மம்மூட்டி, முகேஷ் நடித்த பிரைஸ் த லார்ட் என்ற மலையாளப் படத்திலும் சாம்ராஜ்யம், அமர் அக்பர் அந்தோணி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

விஷாலின் ஆக்ஷன்
பின்னர், லாட் என்ற கன்னட படத்திலும் நடித்தார். தமிழில் கடைசியாக, விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். சன் டி.வியில் ஒளிபரப்பான விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாகவும் நடித்திருந்தார்.

நடிகருடன் காதல்
இவரும் பிரபல இந்தி டிவி நடிகர், பரஸ் சப்ராவும் காதலித்து வருகின்றனர். ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள பரஸ், இப்போது இந்தி 'பிக்பாஸ் 13' வீட்டில் இருக்கிறார். அவரும் ஆகன்ஷாவும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.

அடுத்தக் கட்டம்
இதுபற்றி பிக்பாஸ் வீட்டில் சல்மான் கானிடம் பரஸ் கூறும்போது, இனியும் என் காதலை தொடர விரும்பவில்லை. அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறோம் என்றார்.

தயாராக இருக்கிறேன்
இதுபற்றி ஆகன்ஷா கூறும்போது, கடைசியாக நான் பரஸிடம் பேசும்போது, இனியும் இதை தள்ளிப் போட வேண்டாம், காத்திருந்தது போதும் என்றார். நான் தயாராக இருக்கிறேன்.

பேசி முடிவு
இப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியே வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வந்ததும் இருவரும் பேசி முடிவு செய்வோம். அநேகமாக இந்த வருடம் எங்கள் திருமணம் இருக்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











