முறிந்தது, 3 வருட காதல்.. பச்சை குத்தியிருந்த நடிகையின் பெயரை அதிரடியாக மாற்றினார் பிரபல நடிகர்!
சென்னை: பிரபல நடிகையின் பெயரை, தனது கையில் பச்சைக் குத்தி இருந்த நடிகர், அதை மாற்றி அமைத்துள்ளார்.
கார்த்திக் நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படம் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் ஆகன்ஷா புரி.
இதில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். சுராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், 2013 ஆம் ஆண்டு வெளியானது.

விஷாலின் ஆக்ஷன்
இதையடுத்து மம்மூட்டி, முகேஷ் நடித்த பிரைஸ் த லார்ட் என்ற மலையாளப் படத்திலும் சாம்ராஜ்யம், அமர் அக்பர் அந்தோணி படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர், லாட் என்ற கன்னட படத்தில் நடித்த ஆகன்ஷா, தமிழில் விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். சன் டி.வியில் ஒளிபரப்பான விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாகவும் நடித்திருந்தார்.

அடுத்தக் கட்டம்
இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், டிவி நடிகர், பரஸ் சப்ராவை காதலித்து வந்தார். பல சீரியல்களில் நடித்துள்ள பரஸ், இந்தி 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இருவரும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். இதுபற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கானிடம், எங்கள் காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்' என்று கூறியிருந்தார்.

மூன்றுவருட காதல்
இந்நிலையில், பரஸ் பிக்பாஸ் வீட்டில் இருந்த மஹிரா சர்மா என்பவரை காதலிக்கத் தொடங்கினார். இதன் காரணமாக, ஆகன்ஷாவுக்கும் பரஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தங்களது மூன்று வருடக் காதலை, கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென முறித்துக் கொண்டனர். பரஸ், காதல் உச்சத்தில் இருந்தபோது, தன் கையில் ஆகன்ஷாவின் பெயரை பச்சைக் (டாட்டூ) குத்தியிருந்தார்.

பிக்பாஸ் கண்
காதல் இப்போது முறிந்துவிட்டதால், அதை நீக்க முடிவு செய்தார். இந்நிலையில் அந்த பச்சையை, பிக்பாஸ் கண்ணாக மாற்றியுள்ளார். இதுபற்றி பரஸ் கூறும்போது, 'எனது முந்தைய காதல் உறவையும் அது தொடர்பான நினைவுகளையும் முழுவதுமாக அழித்துவிட முடிவு செய்தேன். அதனால் அந்த டாட்டூவை மாற்றினேன். இனி என் உடலில் டாட்டூ குத்திக்கொள்ள மாட்டேன்.

மாற்றி இருக்கிறேன்
பிக்பாஸ், என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை தந்திருக்கிறது. அங்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதனால், அதன் நினைவாக அந்த டாட்டூவை பிக்பாஸ் கண்ணாக மாற்றி இருக்கிறேன்' என்றார். நடிகை ஆகன்ஷாவும் பரஸ் பெயரை தனது கையில் டாட்டூ குத்தியிருந்தார். பின்னர் அதை மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











