பராசக்தி ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனுக்கு சுதா கொங்கராவுடன் வந்த பிரச்னை.. ச்ச மனுஷன் பாவம் ப்பா

சென்னை: பராசக்தி திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவுள்ளது. நேற்று வெளியான படத்தின் ட்ரெய்லர் பட்டையை கிளப்பி யூடியூபில் வியூஸ்களை அள்ளிவருகிறது. இது ஒருபக்கம் இருக்க இன்னும் சில நாட்களில் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கிவிடும். எனவே அமரன் மாதிரியே வசூலில் பல சாதனைகளை பராசக்தி படைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் சுதா கொங்கரா பற்றி பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

அமரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அது அமரன் அளவுக்கு மெகா ஹிட் இல்லையென்றாலும் சூப்பர் ஹிட்டானது. அதில் நடித்துக்கொண்டிருந்தபோதே சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் கமிட்டானார் எஸ்கே. இது அவருக்கு 25ஆவது படமாகும். அமரன் படம் மாதிரியே இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார் அவர்.

கதை அப்படி: கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற உறுதியையும் மனதுக்குள் கொண்டிருக்கிறார் அவர். ஏனெனில் படத்துடைய கதை அப்படி. பொதுவாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே உணர்வினை கொண்டிருப்பார்கள். இப்படத்தில் சரியாக அதை சுதா கொங்கரா பிடித்திருப்பதால்; நிச்சயம் தரமான சம்பவங்களை செய்யப்போவது உறுதிதான். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பராசக்தி தீ எவ்வளவு தூரம் பாசிட்டிவ்வாக பரவுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Parasakthi Audio Launch Sivakarthikeyan s Speech on Sudha Kongara Trends Online
Photo Credit:

ட்ரெண்டாகும் பேச்சு: நேற்று வெளியான ட்ரெய்லரே படம் மெகா ஹிட் என்பதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் பராசக்தி ஆடியோ லான்ச்சில் சுதா கொங்கரா பற்றி சிவகார்த்திகேயன் பேசியது பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் பேசுகையில், "கொட்டுக்காளி படம் பார்ப்பதற்காக அருண் விஷ்வா ஆஃபிஸுக்கு சுதா மேடம் வந்திருந்தாங்க. படம் பார்த்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது என சொல்லி; லவ் ஸ்டோரி ஒன்றை கூறினார்.

நான் ரொம்ப எதிர்பார்த்தேன்: அவர் ஐடியா இருக்கிறது என்று சொல்லும்போதே பெரிய ஐடியாவாக இருக்கும் என நினைத்தேன். பிறகு என்னிடம் இன்னொரு ஐடியா இருக்கிறது என்று சொல்லி இதை சொன்னார். உடனே ஒத்துக்கொண்டேன். ஷூட்டிங் போவதற்கு முன்னர் அவரை பற்றி என்னவெல்லாமோ சொன்னார்கள். பயங்கர ஸ்ட்ரிக்ட் என்றெல்லாம் கூறினார்கள். ஷூட்டிங் ஆரம்பித்ததும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தான் பேசினார். அவர் பேசிய ஆங்கிலம் சாதாரண ஆங்கிலம் இல்லை. ஷேக்ஸ்பியர் ஆங்கிலம்.

என்ன பிரச்னை: அவர் சொல்லிவிட்டு போன பிறகு Chatgptயில் அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வேன். ஒருமுறை அவர் என்னிடம், சிவா நான் உங்களிடம் பேச வேண்டும் என சொன்னார். எனக்கு பயம் எடுத்துவிட்டது. கல்லூரிதான் நியாபகத்துக்கு வந்தது. பேச வந்தவர், மீண்டும் ஆங்கிலத்தில் உங்களுக்கு என்ன பிரச்னை. நான் சொல்வதை ஏன் சரியாக செய்யமாட்டேன் என்கிறீர்கள் என கூறினார். உடனே நான், 'மேடம் இந்த ஆங்கிலம்தான் பிரச்னை. நீங்கள் பேஸிக் இங்கிலீஷ் பேசினால்கூட பரவாயில்லை. ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ் பேசுகிறீர்கள்' என கூறினேன். இதுதான் பிரச்னையா என சொல்லி மாற்றிக்கொண்டார்.

கண்டிப்பாக ஹிட்டடிக்கும்: காலை 7 மணிக்கே முதல் ஷாட் வைத்துவிடுவார். மாலை 5.30 முதல் ஆறு மணிவரை ஷூட்டிங் போகும். ஒரு நிமிடத்தைகூட அவர் வீணாக்கி பார்த்ததே இல்லை. எல்லோருமே பயங்கரமாக உழைத்திருக்கிறோம். ஆனால் சுதா கொங்கரா மேடத்தின் உழைப்புக்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும், வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X